மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

இரு தொகுதிகளில் போட்டியிடும் கேரள பாஜக தலைவர்!

இரு தொகுதிகளில் போட்டியிடும் கேரள பாஜக தலைவர்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 20 இடங்களில் போட்டியிடும் பாஜக, கேரளாவில் 115 தொகுதியில் போட்டியிடுகிறது.

வரும் ஏப்ரல் 6இல் நடைபெறும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று (மார்ச் 14) அறிவித்தார்.

112 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் அருண் சிங் கூறியதாவது:

“கேரளாவில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 தொகுதிகள் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஷ்வர், பத்தனம்திட்டா மாவட்டம் கோனி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

முன்னாள் மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் நேமம் தொகுதியிலும், மெட்ரோ மேன் டாக்டர் இ.ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். கே.ஜே.அல்போன்ஸ் கஞ்சிராப்பள்ளியிலும் நடிகர் சுரேஷ் கோபி திரிச்சூரிலும் டாக்டர் அப்துல் சலாம் திரூர், டாக்டர் ஜேக்கப் தாமஸ் இரிஞ்சலகுடா தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

மாநிலத்தில் ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவிப்பதற்கு முன்பே கட்சித் தலைவர் கே.சுரேந்திரன் தனது பிரச்சார நடவடிக்கைகளை காசர்கோட்டில் உள்ள மஞ்சேஸ்வரத்திலிருந்து நேற்று (மார்ச் 14) தொடங்கினார்.

முதலில் சுரேந்திரன் கோனியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மஞ்சேஸ்வரத்தில் கடந்த தேர்தலில் சுரேந்திரன் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அவர் இந்த முறை வாக்குப் பதிவை மேம்படுத்த முடியும். எனவே இங்கிருந்து களமிறங்க முடியும் என்று தேசிய தலைமை மதிப்பீடு செய்தது. வரும் தேர்தலில் பிஜேபி கேரளாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும்” என்றார்

-சக்தி பரமசிவன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 15 மா 2021