மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனைகள்,குடும்ப நலநிதி உயர்வு!

பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனைகள்,குடும்ப நலநிதி உயர்வு!

பத்திரிக்கையாளர்களுக்கு குடும்ப நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

100. மாநில அளவிலான "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்" விரைவில் அமைக்கப்படும்.

101. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்ட நிதி, அவர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில், சிறப்பு தனிச் சட்டம் இயற்றப்படும்.

102. புதிய நிலமெடுப்பு சட்டத்தின் படி, உரிய இழப்பீடுகள் அளித்த பின்னரே, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை

103. முந்தைய திமுக ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க மாண்புமிகு அம்மா அவர்களால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி கச்சத்தீவை மீட்போம்.

104. உறுதித்தன்மை இல்லாத வீடுகளுக்கு பதிலாக, ஏழை மீனவர்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டித் தரப்படும்.

105.விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு 18,000- லிருந்து 20,000 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

106. நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையிலான வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு4,000லிட்டரில் இருந்து 5,000லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

107.நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஆண்டொன்றுக்கு 3,400 லிட்டரிலிருந்து 4,500லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

108. மீன்பிடி தடை கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

109.மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான சேமிப்பு மற்றும் நிவாரணமாக வழங்கப்படும் தொகை ரூ.4,500/-லிருந்து ரூ. 5,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

110.மீனவர்கள் கடன் உதவி பெற ஏதுவாக கூட்டுறவு மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும்.

111. விபத்தில் இறந்த மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியநிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2,00,000/-லிருந்து ரூ.5,00,000/ உயர்த்தி வழங்கப்படும்.

112.கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடல் மீன்வளர்ப்பு, உள்நாட்டு மீன்வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ள விரிவான கொள்கை உருவாக்கப்படும்.

113.விவசாயத்திற்கு பயன்படாத கடலோர நிலங்களை கண்டறிந்துஅவற்றை கடலோர மீன் வளர்ப்பிற்கு பயன்படும் வகையில்திட்டங்கள் வகுக்கப்படும்.

114.சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மொத்த மீன் விற்பனைச்சந்தை ஒன்று ஏற்படுத்தப்படும்.

115. இராமநாதபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் கடல்பொருள் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும் .

116. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், கொக்கிலமேடு, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் உவரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மீன்பிடித் துறைமுகங்கள்/ மீன்பிடி இறங்குதளங்கள் கட்டப்படும். குளச்சல் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும்.

117. உள்நாட்டு மீனவர்களின் நலன் கருதியும், விவசாயிகளின் நலன் கருதியும் தேவையான இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும்.

118. பருவகால மாற்றத்தாலும், இயற்கை சீற்றத்தாலும் கடற்கரை ஓர நிலப்பரப்பு கடல் அரிப்பால் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, மீனவர்கள் குடியிருப்பை காப்பாற்றவும், மீன்பிடித் தொழிலுக்கான இடத்தை காப்பாற்றவும், மொத்தத்தில் கடலோர நிலப்பரப்பை காப்பாற்றவும் கருங்கல் தடுப்புச்சுவர் கடலோரத்தில் அமைக்கப்படும்

119. கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் ரூபாய் ஒரு இலட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

120. விசைத்தறி களுக்கு மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும்.

121. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் ரூ. 5,000/- வழங்கப்படும்.

122. பருவகால மாற்றத்தால் தொடர்ந்து நூல் விலை உயர்வை ஜவுளித்துறை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு தேவையான பஞ்சினை பஞ்சு உற்பத்தி காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

123. கைத்தறி ஆடைகளுக்கும் முழு வரி விலக்கு வழங்க மைய அரசை வற்புறுத்துவோம்.

124. உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்தி – நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நூல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

125. கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

126.நடைபாதை வியாபாரிகளுக்கு உத்திரவாதமின்றி ரூ.10,000/-”வட்டியில்லாமல் வழங்கப்படும் சுழல் நிதிக் கடன் ”திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

127. அனைத்து அமைப்புச்சாரா கூலித் தொழிலாளர்களுக்கும் வட்டியில்லா கடன் ரூ. 10,000/- வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

128.அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

129. வணிகர் நலனை கருத்தில் கொண்டு, வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் வியாபாரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பரம்பிக்குளம்-ஆழியார் அணைக்கட்டுத் திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தையும் மற்றும் பாண்டியாறுபுன்னம்புழா திட்டத்தையும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

152. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவக்கம். முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் பணி உடனடியாகத் துவங்கப்படும்.

நீர் வளங்கள்

153. அ. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசால் துவக்கப்பட்ட நீர்பாசனக் கால்வாய் திட்டங்கள் ஆன அத்திகடவு-அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி-கருமேனியாறு, காவிரிகுண்டாறு, காவிரி உப வடிநில புனரமைப்பு, கல்லணைக் கால்வாய் புனரமைப்பு, கீழ்பவானிக் கால்வாய் புனரமைப்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எண்ணேகோல், ஜெர்தலாவ், அளியாளம் உள்ளிட்ட நீர் பாசனக் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.

ஆ.மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொண்டு நீர் மேலாண்மையை உறுதிப்படுத்துகிற வகையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, நீர்பாசன வசதிகளையும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், தேவையான இடங்களில் அணைக்கட்டுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இ. மாநிலம் முழுவதும் உள்ள நதி, ஆறு, ஓடை போன்றவற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ஈ. காவிரி நதி மற்றும் அதன் உப நதிகளில் ஏற்படும் மாசுகளை களைய "நடந்தாய் வாழி காவேரி" திட்டம் செயல்படுத்தப்படும்.

உ. சென்னை வெள்ள தடுப்புப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்

ஊ. தென் தமிழகத்தின் நீர் மேலாண்மையை முன்னெடுத்துச் செல்லும் விதமாக தாமிரபரணி ஆற்றின் உபநீரை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

எ. தாமிரபரணி – வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்

ஏ. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமைந்துள்ள அனைத்து குளங்களும் புனரமைக்கப்படும். இதன்மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு

கோவில்களின் பண்டைய தன்மை திரும்ப கொண்டுவரப்படும்.

ஐ. தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு5 இலட்சம் ஏக்கர் பரப்பளவிலான விலை நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்படும்.

நீர் மேலாண்மை

அ. மாண்புமிகு அம்மா அவர்களின் மழைநீர் சேகரிப்பு திட்டமும், மாண்புமிகு அம்மா அரசின் நீர் மேலாண்மை திட்டங்களும், மக்கள் இயக்கமாக முன்னெடுத்து சென்று தமிழ்நாட்டை தொடர்ந்து, நீர் மிகை மாநிலமாக தக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு தற்போது 42 இலட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2025 ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இ. தேவைப்படும் இடங்களில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படும்.

ஈ.அனைத்து மாநகராட்சிகளிலும், நீர் மறுசுழற்சி, கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கடல் சுற்றுலா பூங்காக்கள்

154. சென்னை மற்றும் இராமேஸ்வரம்-தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத்தரத்தில் கடல் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.

155. சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையினை சென்னையில் நிறுவிட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

156. தமிழ்நாடு வழக்கறிஞர்களின் நலன் மற்றும் அவர்தம் குடும்பப் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர் சேமநல நிதியினை ரூ.7.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

157. போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

திருவுருவச் சிலைகள்-மணிமண்டபங்கள் அமைத்தல்

158. அ.சென்னை கலைவாணர் அரங்கத்தின் வெளியே கலைவாணர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலை நிறுவப்படும்.

ஆ. நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

இ. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்

ஈ. சொல் ஆராய்ச்சி வல்லுநர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

உ. சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்

ஊ. கீழ்பவானி பாசனத் தந்தை தியாகி அய்யா ஈஸ்வரன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுத்தூண் மற்றும் மணி மண்டபம் அமைக்கப்படும்

எ. உப்பு சத்தியாக்கிரக தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

ஏ. தீரர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

ஐ. மதுரையில் தீரன் அழகு முத்துகோன் சிலை நிறுவப்படும். ஒ. செஞ்சி தேசிங்கு ராஜா அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

ஓ. போயர் சமூகத்தில் கோவை நகரில் பிறந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து தொண்டாற்றி மறைந்த சமூகப் பெரியவர் திரு.கிருஷ்ணா போயர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து தரப்படும்.

சூரிய ஒளி மின்சார மானியம்

159. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க மானியம் கூடுதலாக வழங்கப்படும்.

அரசு நிர்வாகம் அரசு ஊழியர்கள் நலன்

160. அ. குடும்ப நலநிதி ரூபாய் மூன்று இலட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தப்படும்.

ஆ. அரசு ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய குறுகிய கால கடன்கள் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.2.00 இலட்சம் வரை கடன்கள் அளிக்கப்படும்.

இ. அரசுப்பணியில் சேரும் வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும். காவல் துறை காவலர் நலன்

ஈ. காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டு, காப்பீட்டின் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை வழங்கப்படும்.

ஊ. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கப்படும்.

எ. 20 ஆண்டுகாலம் காவலர்களாக பணியாற்றியவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். 25 ஆண்டுகாலம் ஆன பிறகு பதவி உயர்வு பெறுவார்கள்.

பன்னட்டுக்கு வாகன நிறுத்தங்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதியில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பன்னடுக்கு வாகன நிறுத்த வாகன வளாகங்கள் கூடுதலாக அமைக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வட்ட அலுவலகங்கள் உருவாக்குதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தேவையான பிற மாவட்டங்களிலும் புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் அமைக்கப்படும்.

நிதி நிர்வாகத்தில் புதிய முயற்சி

161. அ. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறும் வகையில் மத்திய அரசை அ.இ. அண்ணா தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஆ. உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சேவையை தமிழ்நாட்டில் இருந்து வழங்க சென்னை காவனூரில் 260 ஏக்கர் பரப்பளவில் "நிதி தொழில்நுட்ப நகர்" அமைக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், இதன் மூலம் 1,28,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

நாட்டுப்புறக் கலைஞர்கள்

162.அ. 60 வயதைக் கடந்த அனைத்து நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஆ. நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.5000/- வருடாந்திர பராமரிப்பு நிவாரணத் தொகை வழங்கப்படும்

பத்திரிக்கையாளர் நலன்

163. அ பத்திரிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்.

ஆ. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு வீடுகட்டிக் கொள்வதற்கு குடியிருப்பு மனைகள் வழங்கப்படும்.

இ. பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

ஈ. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசால் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 14 மா 2021