மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

பொன்.ராதாகிருஷ்ணன் vs விஜய் வசந்தகுமார்: கவனம் ஈர்க்கும் கன்னியாகுமரி

பொன்.ராதாகிருஷ்ணன்  vs  விஜய் வசந்தகுமார்: கவனம் ஈர்க்கும் கன்னியாகுமரி

நாட்டின் முதல் எல்லை பகுதியான கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான வசந்தகுமார் 2020 ஆகஸ்டில் மரணமடைந்தார். இதனால் காலியான கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இப்போது சட்டசபை தேர்தலோடு ஏப் 6இல் இடைத்தேர்தல் நடக்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் மோதின. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாரதீய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி வாய்ப்பை இழந்தார். வசந்தகுமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து இப்போது நடக்கும் இடைத்தேர்தலிலும் பாரதீய ஜனதா - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நடக்கிறது.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் இங்கு பொன்.ராதா கிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நேற்று (மார்ச் 13) காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். தந்தை வசந்தகுமார் வழியில் அரசியல் பணி செய்து வந்தார். வசந்தகுமார் இறந்ததும் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் கன்னியாகுமரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகஸ்தீஸ் வரத்தில் உள்ள வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மணிமண்டபம் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அப்போதே கன்னியாகுமரி எம்.பி. தொகுதி வேட்பாளராக விஜய்வசந்த் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படியே இப்போது விஜய்வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் வசந்த்தை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், இத்தொகுதியில் ஏற்கனவே பல முறை போட்டியிட்டவர்.இத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர். இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

விஜய் வசந்த் இப்போது தான் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார். அவருக்கு இறந்து போன தந்தை வசந்தகுமாரின் செல்வாக்கும், அவர் மேற்கொண்ட நலத்திட்ட பணிகளும் கை கொடுக்கும் என்று நம்புகிறார். ஏற்கனவே ராகுல்காந்தி இத்தொகுதியில் பல்வேறுபகுதியில் அண்மையில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.பொன்ராவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் செய்து சென்ற நிலையில் பிரதமர் இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவதாக கூறப்படுகிறது.

சக்தி பரமசிவன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 14 மா 2021