மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!

வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு, பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலுடன் தமிழக பாஜகவினர் அடங்கிய குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சி தலைமையிடம் ஆலோசிக்க டெல்லி சென்றிருந்தது.

இதனிடையே பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியிலிருந்து வந்தது. பாஜகவில் இணைந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (மார்ச் 14) மதியம் வெளியிட்டார். அதில் 17 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

1.தாராபுரம் (தனி) - எல்.முருகன்

2.துறைமுகம் - வினோஜ் பி செல்வம்

3.ஆயிரம் விளக்கு- குஷ்பு

4.திருவண்ணாமலை- தணிகைவேல்

5.திருக்கோவிலூர் - கலிவரதன்

6.மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி

7.கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

8.அரவக்குறிச்சி- அண்ணாமலை

9.திட்டக்குடி (தனி)- தடா பெரியசாமி

10..திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

11.காரைக்குடி - எச்.ராஜா

12.மதுரை வடக்கு - சரவணன்

13.விருதுநகர் - பாண்டுரங்கன்

14.ராமநாதபுரம் - குப்புராம்

15.திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

16.நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

17.குளச்சல் - ரமேஷ்

ஆகியோர் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா எஸ் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர்பாபுவை எதிர்த்து போட்டியிடுகிறார் பாஜக தமிழக இளைஞரணித் தலைவர் வினோஜ் பன்னீர்செல்வம்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மங்குடி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

ஞாயிறு 14 மா 2021