மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்: உதயநிதி

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்: உதயநிதி

மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராக இருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகச் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக தான் போட்டியிடும் தொகுதிக்கு சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்போது இருந்த எழுச்சி இப்போதும் இருக்கிறது. உதய சூரியன் வெற்றி பெறுவது தான் எங்களது நோக்கம். தொகுதி மக்கள் நன்றாக வரவேற்கிறார்கள். கலைஞர் இருமுறையும், மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஒருமுறையும் வெற்றி பெற்ற தொகுதி.

கடந்த நவம்பர் மாதமே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டேன். மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். தொகுதி முழுவதும் சென்று மக்களின் குறைகளைக் கேட்பேன். அனைத்து வேட்பாளர்களும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

கண்டிப்பாகத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன். மற்ற இடங்களில் நாளை பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்” என்று தெரிவித்தார்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 14 மா 2021