மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

பிரச்சாரம்: ஜெ. பாணியில் ஸ்டாலின்

பிரச்சாரம்: ஜெ.  பாணியில் ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகிய வற்றை வெளியிட்டுவிட்டு தேர்தல் சூறாவளி பிரச்சாரத்துக்கு தயாராகிறார்.

இதற்கான திட்டங்கள் தீவிரமாக வகுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு மாதங்களாகவே தமிழகம் மீட்போம் காணொலிக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின் பின் மக்கள் கிராம சபை என்ற நிகழ்விலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்விலும் தமிழகம் முழுக்க சுற்றி வந்தார். அடுத்த கட்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க இருந்த நிலையில்தான் தேர்தல் அறிவிப்பு, பின் தொகுதிப் பங்கீடு, நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என்று தொடர்ந்து சென்னையிலேயே ஸ்டாலின் இருக்க வேண்டியதாகிவிட்டது.

இப்போது இருபது நாட்கள் மட்டுமே பிரசாரத்துக்கு இருக்கும் நிலையில் ஜெ.ஸ்டைலில் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.

இதுவரை மேற்கொண்ட பயணங்கள் போல அல்லாமல் இனி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற மாநகரங்கள் பின் சேலம், வேலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற அந்தந்த மண்டலங்களை உள்ளடக்கிய ஒரு இடத்தில் மட்டும் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளார் ஸ்டாலின்.

இதற்காக ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளலாமா அல்லது காரிலேயே சென்றுவிடலாமா என்ற ஆலோசனை இப்போது ஸ்டாலின் வட்டாரத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிரச்சாரத்துக்கு நாட்கள் குறைவாக இருப்பதால் அந்தந்த மண்டலங்களின் முக்கிய நகரங்களில் அந்தந்த மண்டலத்தின் திமுக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களையும் மேடையேற்றி பிரச்சாரம் செய்வது என்பதுதான் ஸ்டாலினின் இப்போதைய திட்டம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

ஞாயிறு 14 மா 2021