மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

அமைச்சர் கார் சோதனை: அலுவலர் இடமாற்றம்!

அமைச்சர் கார் சோதனை: அலுவலர் இடமாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூவின் காரை சோதனையிட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் பறக்கும் படைஅலுவலர் வேறு தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிர வாகன கண்காணிப்பு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊத்துப்பட்டி விலக்கு அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, எஸ்ஐ முருகன் மற்றும் பறக்கும்படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அவரின் நிர்வாகிகள் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்

ஏற்கனவே கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் காரில் சென்றபோதும் இதே பறக்கும்படை குழுவினர் சோதனை நடத்தியதால், ஆத்திரமடைந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ ,இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் கேட்டபோது, தங்கள் கடமையை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

அலுவலர்களின் விளக்கத்தை கேட்காமல் அமைச்சர், மிரட்டியதாகவும், ஒருமையில் பேசியதாகவும் பறக்கும்படை அலுவலர் மாரிமுத்து, நாலாட்டின்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி மாரிமுத்து விளாத்திகுளம் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 14 மா 2021