மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

காங்கிரஸ்: 4 வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதம் ஏன்?

காங்கிரஸ்:  4 வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதம் ஏன்?

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 13) இரவு அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க என்ன சிக்கல் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.

"விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல குளச்சல் தொகுதியில் பிரின்ஸ் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தலா இரு முறை எம்எல்ஏ பதவி வகித்து விட்டதால் சிட்டிங் எம்எல்ஏ வாக இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று அந்தந்த பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தலைமைக்கு புகார்கள் போயிருக்கின்றன. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் விருப்பமில்லை என்று தெரிகிறது. நேற்று கூட விஜயதாரணிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடந்தது.

இது தவிர அறிவிக்கப்பட்ட 21 வேட்பாளர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை. அதனால் வேறு எந்த தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்தது. வேளச்சேரியில் முன்னாள் எம்பி ஆரூணின் மகனான இளைஞர் காங்கிரஸ் ஹஸன் மௌலானா வேட்பாளராக நிறுத்தலாம் என தமிழகத் தலைமை கருதுகிறது. ஆனால் அகில இந்தியச் செயலாளர் சி டி மெய்யப்பன் வேளச்சேரி தொகுதியை தனக்குக் கேட்டு டெல்லி வரை அழுத்தம் கொடுக்கிறார்.

மீதமிருப்பது மயிலாடுதுறை தொகுதிதான். அந்தத் தொகுதியில் இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட அளவு இருந்தாலும் அங்கே ஹசன், மாநில செயலாளர் நாகூர் நவுஷத் என ஒரு இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தலாமா... அதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் சம்மதிப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. சென்னை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்கியுள்ள தமிழக தேர்தல் பொறுப்பாளர் குழுவின் தலைவர் திக்விஜய்சிங் இது தொடர்பாக மணி சங்கரய்யரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தான் கேட்டு வாங்கி இருக்கிற ஒரே ஒரு தொகுதி அதை விட்டுக்கொடுக்க முடியாது என்று மணிசங்கர் அய்யர் மறுத்துவிட்டார். அத்தொகுதியில் அய்யரின் ஆதரவாளரான ராஜ்குமார் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரங்களால் தான் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகியுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் போது இந்தப் பட்டியலும் வெளியாகும்” என்கிறார்கள்.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 14 மா 2021