மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: அமமுக வாக்குறுதி!

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: அமமுக வாக்குறுதி!

சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 12) இரவு வெளியிட்டார்.

இதில் வழக்கமான சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், ‘முதலீட்டாளர்களாக மாற்றி கிராம மக்களை நகரத்தை நோக்கிச் செல்லாமல் கிராமத்திலேயே வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம்’ உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

அரசின் நேரடிப் பார்வையில் கிராமப்புறங்களிலும், பேரூர்களிலும் பல்வேறு வகையான தொழிலகங்களை உருவாக்கி, அதன் வழியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும். இதன்மூலம் கிராமப்புற மக்கள் நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாதவாறு அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழக அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 85 சதவிகித பேரை நியமிக்க புதிய சட்டம்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத் தமிழக அரசுப் பணியில் இட ஒதுக்கீடு

ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

45 வயது வரையிலான பணிக்குச் செல்லும் ஆண்களுக்கு டூவீலர் வழங்கிட மானியம். மானிய வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முக்கிய நகரங்களில் இதய சிகிச்சை, குழந்தைகள் நலன், புற்றுநோய்க்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மதுரை- தூத்துக்குடி இடையிலான புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி.

சூரிய ஒளி காற்றாலை மூலம் மின் உற்பத்திக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்.

காவல்துறையில் பெண் காவலர்களுக்குத் தனிப்பிரிவு.

வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு சீரமைப்பு.

சுங்கச்சாவடி கட்டண வரையறை.

பெட்ரோலிய விலை பொருட்கள் நிர்ணயம்.

கூடுதலாகச் சட்டப்பேரவைத் தொகுதிகள் உருவாக்கப்படும்

தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை உடனடியாக எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியில் வினியோகம் செய்யப்படும்.

தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறைச் செயலர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கிய நிரந்தர ‘தொழில் வளர்ச்சி வாரியம்’ ஒன்று அமைக்கப்படும்

காலியாக உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் உள்ளிட்ட அரசுப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பகுதி நேர ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், இசை, ஓவியம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்குக் காலியிடங்களை நிரப்புவதில் முன்னுரிமை வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையே செயல்படுத்தப்படும்

100 பேருக்குக் குறையாமல் வேலைசெய்யும் அரசு அலுவலக வளாகங்கள் அனைத்திலும் சலுகை விலை உணவகங்கள் அமைக்கப்படும்

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்காக 8 கிராம் தங்கமும், உதவித்தொகை ரூ.25,000லிருந்து ரூ50,000/- ஆகவும், பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்குத் தாலிக்காக 8 கிராம் தங்கத்துடன், ரூ.50,000 மாக உள்ள உதவித்தொகை ரூ.1,00,000/- ஆகவும் உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 13 மா 2021