மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

மாதம் ஒரு முறை மின் கட்டணம்!

மாதம் ஒரு முறை மின் கட்டணம்!

மின் திருட்டை தடுப்பதற்கு அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

220. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கி வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்

221. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு 1000-யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6000 ரூபாய் வரையில் பயன்பெறுவர்.

222. மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக் கட்டணம் 50 ரூபாய் தடை செய்யப்படும்.

223. மின் கட்டணம் செலுத்துவதற்குத் தற்போது வங்கிகளில் செலுத்தும் முறை, இணையம் வழியாகச் செலுத்தும் முறை மற்றும் மின்வாரிய அலுவலகத்திலேயே நேரடியாகச் செலுத்தும் முறை என மூன்று வழிகள் நடைமுறையில் உள்ளன. இனி வீடுகளுக்குச் சென்று மின்சார மீட்டர் அலகுகளைக் கணக்கெடுக்கும் பணியாளரே மின் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கேற்ற நடைமுறையையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

224. தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் மின் உற்பத்தியைத் தொடங்க ஊக்கமளிக்கப்படுவதுடன், அதனைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

225. அனைத்து அரசு அலுவலகக் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், கோயில்கள் முதலியவற்றில் சூரியஒளி மின் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டு, மின் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

226. விவசாயம் சார்ந்த திடக் கழிவிலிருந்து 10 ஆறு திறனுக்குக் குறையாமல் உற்பத்தி செய்யக் கூடிய சிறு மின் திட்டங்களை அரசு ஊக்குவிக்கும். அதன் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறையும், பொதுத்துறையும் இணைந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்னுரிமை அளித்துக் கொள்முதல் செய்யும். வேலையில்லாப் பட்டதாரிகள் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தால் சிறப்புச் சலுகைகள்அளிக்கப்படும்.

227. காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் சிறப்பு மின்வழித் தடங்கள் உருவாக்கப்பட்டு, மின் இழப்புகள் ஏற்படாமல் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

228. மின் திருட்டையும் விபத்துகளையும் தடுப்பதற்கு அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள்படிப்படியாக அமைக்கப்படும்.

229. கடந்த தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், குடும்ப அட்டை உள்ள அனைவரின் வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அது நிறுத்தப்பட்டுவிட்டது. தி.மு.கழக அரசு அமைந்தவுடன் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

உடன்குடி - செய்யூர் மின் திட்டங்கள்

230. தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, அ.தி.மு.க ஆட்சியின் குளறுபடிகள் நிறைந்த நிர்வாகத்தால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டுச் சிக்கலாகிப் போயுள்ள உடன்குடி மின் திட்டத்தையும், செய்யூர் அனல்மின் நிலைய திட்டத்தையும் சிக்கல்களை அகற்றி, மீண்டும் உடனடியாகச் செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

20 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி

231. கடந்த கால தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்ட பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போதைய அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சந்தை விலையைவிட அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி வருவதன் விளைவாகப் பெரும் ஊழல் நடைபெறுவதோடு தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும் அளவில் இழப்பைச் சந்தித்து வருகிறது. பொதுமக்களும் கடுமையான கட்டண உயர்வைச் சந்திக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்து சூரியஒளி, காற்றாலை, போன்ற மாசற்ற மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து மக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

232. காலாவதியான தனியார் காற்றாலைகளை அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் புதிய காற்றாலைகளை ஏற்கனவே அரசுடன் செய்யப்பட்ட பழைய ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.

233. சோலார் (சூரிய சக்தி) மின்சார வாரியத்தின் மூலம் பொருத்தப்படும் நுசூ ஆநுகூநுசு கிடைப்பது மிகவும் சிரமமாகவும் தாமதமாகவும் உள்ளது. இதை விரைவுபடுத்தினால் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெருமளவு உயர வாய்ப்புள்ளது. எனவே நுசூ ஆநுகூநுசு அதிகளவில் கொள்முதல் செய்து விரைவாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோகத் திட்டம்

234. குடும்ப அட்டைகள் இல்லாத தகுதியானவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும்.

235. குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் தொடரும். இத்திட்டத்தில் தரம் மிகுந்த அரிசி வழங்குவது உறுதி செய்யப்படும்.

236. தமிழ்நாட்டில் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

237. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பழைய குடும்ப அட்டைகளை மாற்றி, ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவிநியோகத் திட்டத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க இத்திட்டம் முழுவதும் கணினிமயமாக்கப்படும். மேலும், நியாயவிலைக் கடைகளில் இருப்பில் உள்ள பொருள்களின் விவரங்கள் மின்னணுத் தகவல் பலகைகளில் வெளியிடப்படும்.

238. சுகாதாரத்தையும், எடையையும் உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை, மைதா, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட எல்லாப் பொருட்களும் பாக்கெட்டுகளில் வழங்கிட ஆவன செய்யப்படும்.

239. மின்சேமிப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று பல்புகள் வழங்கப்படும்.

240. நியாயவிலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப்பட்டு மாதம் தோறும் ஒரு கிலோ கூடுதலாக வழங்கப்படும். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

சுற்றுலா

241. சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டும் பெருமளவில் அந்நிய செலாவணி மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும் பல்வேறு வகையான சுற்றுலாக்களை ஊக்குவிக்கவும் புதிய கண்ணோட்டத்தோடு பெருந்திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மாமல்லபுரம், குற்றாலம், உதகமண்டலம், கொடைக்கானல், கன்னியாகுமரி, திருவரங்கம், செஞ்சி, இராமேசுவரம், மதுரை, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகர்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 13 மா 2021