மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

ராஜபாளையத்தைத் தேர்வு செய்தது ஏன்?: ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தைத் தேர்வு செய்தது ஏன்?: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை என அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் நேற்று (மார்ச் 12) மாலை முதல் அமாவாசை திதி, துவங்கியதால் நல்லநேரம் பார்த்து பிரச்சாரத்தைத் துவக்கினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைகை செல்வன் அருப்புக்கோட்டையில் நேற்று மாலை முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துத் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார். அப்போது, மாவட்டத்தில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாகி என்ன பயன்,'என தி.மு.க., மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரனை விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து அவர், “அருப்புக்கோட்டை மக்கள் தங்கள் வாகனங்களுக்கு லைசென்ஸ் பெற கூட '8' போட விருதுநகருக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. நான் எம்.எல்.ஏ., ஆன பிறகு அருப்புக்கோட்டையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொண்டு வந்தேன். ஏழை மாணவர்கள் கல்லூரி சென்று படிக்க ஏங்கிய நிலையில் அவர்களுக்காக அரசு கலைக் கல்லூரி கொண்டு வந்தேன். நான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. தி.மு.க., விற்கு வாக்களித்து ஏமாந்து போகாதீர்கள். என்னை வெற்றி பெறச் செய்தால் மீண்டும் தொகுதிக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவேன்” என்றார்.--

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைகை செல்வன் மூன்றாம் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை தோற்கடித்து முதல் முறையாகச் சட்ட மன்றம் சென்றார்

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆரிடம் தோற்றுப்போனார். தற்போது மூன்றாம் முறையாக திமுகவின் அனுபவம் மிகுந்த தொகுதியின் பிரபலமான கேகேஎஸ்எஸ்ஆர்ஆரை எதிர் கொள்கிறார் வைகைசெல்வன்.

இந்நிலையில் ராஜபாளையத்தைத் தேர்வு செய்தது ஏன்? என்பதற்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துப் பேசினார்

ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் அவர் நேற்று மாலை புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தரிசனத்துடன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்

.பிரசாரத்தில் அமைச்சர் பேசியதாவது:

“அமாவாசை நல்ல நேரம் பார்த்து மாலை 5 :00 மணிக்குத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளேன். ஏன் சொந்த தொகுதியில் நிற்கவில்லை எனச் சிலர் கேட்கின்றனர்.எனது சொந்த தொகுதி சிவகாசி என்றாலும் எனது சொந்தக்கார தொகுதி ராஜபாளையம் ஆகும்.நான் இருக்கிற பகுதி மட்டுமல்ல செல்கின்ற பகுதியெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் நான்.இத்தொகுதியில் எனக்கு வீடு, விவசாய நிலங்கள் இருக்கிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

இப்பகுதி மக்களின் அன்பு, பாசம், நன்றி உணர்வுகளை நினைத்துப்பார்த்து இத்தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். 15 ஆண்டுகாலமாக திருத்தங்கல் நகராட்சியில் துணைத் தலைவர் ,10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். இம்முறை ராஜபாளையம் தொகுதியில் பணியாற்ற வேண்டும் என இங்குள்ள கட்சி நிர்வாகிகள், பல்வேறு சமுதாய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் விருப்பத்தின் பேரிலும் ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்காகப் போட்டியிடுகிறேன்.நான் அமைச்சராக இருந்தபோதும் இத்தொகுதி முன்னேற்றத்திற்காக வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன்.

ராஜை-சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளும் எனது முயற்சியில்தான் கொண்டுவரப்பட்டது. 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கே. டி. ராஜேந்திர பாலாஜி வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என்றார்.

ராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றநிலையில் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 13 மா 2021