மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் இன்று (மார்ச் 13) அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

முதலில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை என்பது தமிழக மக்களின் விருப்பமான ஒன்றாகவே அமைந்து வருகிறது. இன்று வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது என்றார்.

அந்த அறிக்கையில்,

திருக்குறளைத் தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கடும் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

முதல்வரின் தனி கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.

அரிசி குடும்ப அட்டை ஒன்றுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும்

சிலிண்டர் மானியம் மாதம் 100ரூபாய் வழங்கப்படும்

பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

மாதம் ஒருமுறை என மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும்

ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். உளுந்து மீண்டும் வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

சட்டம் ஒழுங்கு பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் கொண்டுவரப்படும்.

விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம் வழங்கப்படும்.

தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

சனி 13 மா 2021