மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

மீண்டும் அமமுகவுடன் பேசும் தேமுதிக?

மீண்டும் அமமுகவுடன் பேசும் தேமுதிக?

வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய அணிகள் வேகவேகமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் திணறி வருகிறது. அதிமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய தொகுதிகளும் விரும்பிய தொகுதிகளும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் கூட்டணியை விட்டு வெளியேறியது தேமுதிக.அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் தேமுதிகவில் அதன் பிறகு எந்த சத்தமும் இல்லை. அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதுமே தேமுதிகவை தங்கள் அணிக்கு வருமாறு அழைத்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ். ஆனால் அதற்கு தேமுதிக தரப்பில் எந்த பதிலும் இல்லாததால் அதன் பின் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே அமமுகவோடு தேமுதிக பேசிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் பரவியது. ஒருகட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “பல கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். முடிவானதும் சொல்கிறோம்” என்று நழுவிவிட்டார்.

இதுகுறித்து அமமுக, தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“அமமுக இதுவரை மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேர், இரண்டாம் கட்ட பட்டியலில் 50 பேர், மூன்றாம் கட்டப் பட்டியலில் 130 பேர் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அமமுக சார்பில் இதுவரை 195 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒவைசி கட்சிக்கு 3 இடங்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 6 இடங்கள், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக இதுவரை 208 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டோம்.

இந்த நிலையில் தேமுதிகவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அமமுகவோடு திருப்தி ஏற்படவில்லை. தேர்தல் செலவு தொடர்பான விவகாரங்களில் அமமுக எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. மேலும் தினகரனை முதல்வர் வேட்பாளராக முன்னெடுத்து வேகமாக சென்றுகொண்டிருக்கிறது அமமுக. இந்த விவகாரங்களில் தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லாததால் பேச்சு நின்றது. அதன் பின் மக்கள் நீதி மய்யத்திடம் தேமுதிக பேசியது. ஆனால், ‘எங்கள் கூட்டணிக்கு வந்தால் கூட்டணிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்று கேட்க அதிர்ந்து போனது தேமுதிக. இப்போது மீண்டும் அமமுகவுடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்”என்கிறார்கள்.

தலைவர்கள் பிரச்சாரத்துக்குத் தயாராகிவிட்ட நிலையில் தேமுதிக நிலை இப்போது திரிசங்கு நிலையில் இருக்கிறது”

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 13 மா 2021