மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

அமைச்சருக்கும் துரைமுருகனுக்கும் என்ன தொடர்பு?: வெளியிடும் நிலோபர் கபீல்

அமைச்சருக்கும் துரைமுருகனுக்கும் என்ன தொடர்பு?: வெளியிடும் நிலோபர் கபீல்

வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.

இது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரது வீடு முன்பு போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து அமைச்சர் நிலோபர் கபீல் நேற்று (மார்ச் 12) வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பத்திரிகை ஒன்றில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் உறவினராகப் பழகுகிறேன் என்று எழுதியிருக்கிறார்கள். அவருடன் நான் பழகவில்லை. அமைச்சர் கே.சி.வீரமணிதான் உறவினராகப் பழகுகிறார்.

என்னை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர் சொல்லி இவ்வாறு போட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, என்னை அழைத்து பேசியிருக்கிறார் என எழுதியிருக்கிறார்கள். ஆனால் என்னையும் கே.சி.வீரமணியையும் அழைத்து ஜெயலலிதா சமாதானம் பேசவில்லை. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இவ்வாறெல்லாம் பேசக் கூடாது.

ஜெயந்தியும், பாலசுப்பிரமணியும் எம்.எல்.ஏவாக இருந்த போது, இருவரும் அமைச்சர் பதவியை கேட்கிறார்கள். நீ முஸ்லீமாக இருப்பதால் உன்னை அம்மா எடுக்கமாட்டார் என்று கே.சி.வீரமணி சொன்னார்.

அவரால் தான் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டார்கள். எனக்கு நிறைய தொல்லை கொடுத்தார். ஆனால் இதுவரை நான் புகார் கொடுத்ததில்லை. ஆனால் இன்று பேப்பரில் இவ்வாறு போட்டு மக்கள் மத்தியில் அவமானப் படுத்தியதால் இதையும் சொல்கிறேன்.

முஸ்லீம் ஓட்டுப்போடவில்லை என என் சமூகத்தை இழிவுபடுத்துகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் என் சமுதாய மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. இதனால், வாக்குகள் சரிந்தன. இதற்கு முன்பு நான் இங்கிருந்துதானே வெற்றி பெற்றேன். அப்போது முஸ்லீம் ஓட்டுபோடவில்லையா. அவர் சமுதாயத்தை அவர் உயர்த்தி பேசட்டும், ஆனால் என் சமூதாயத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும். பாஜக இருந்தும் கூட என் கட்சிக்காக நான் செயல்பட்டேன். ஆனால் திமுகவுடன் செயல்படுகிறேன் எனப் போடுகிறார்கள், இதை என்னால் தாங்க முடியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

“டெண்டர்கள் அனைத்தும் திமுகவைச் சேர்ந்த தேவராஜ்க்குதான் கொடுத்தார்கள். ஏலகிரி மலையில் இதற்காகத் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள். காட்பாடியில் செல்வாக்கு இல்லாத ராமு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிட வைக்கின்றனர். ராமுவால் வெற்றி பெற முடியுமா?.

பிசினஸ் டீலிங் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்துகொண்டிருக்கின்றனர். எனினும் எனது கட்சிக்காக உழைத்து செந்தில்குமாரை வெற்றி பெறவைப்பேன். எனக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எத்தனையோ கட்சிகள் என்னை அழைக்கின்றன. ஆனால் நான் இரட்டை இலை கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 13 மா 2021