மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

அமமுக மாசெக்கள், வேட்பாளர்களுக்கு எடப்பாடி வீசும் வலை!

அமமுக மாசெக்கள், வேட்பாளர்களுக்கு எடப்பாடி வீசும் வலை!

அமமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு அதிமுக வலை வீசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலா விடுதலையானதும் பெரிய மாற்றம் இருக்கும், அவரை சந்திக்க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செல்வார்கள் என்ற செய்திகள் அதிவேகமாகப் பரவிவந்தது. அதற்கேற்றாற்போல் பல அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திக்க தயாரானதும் உண்மைதான். ஆனால் அப்படி இருந்தவர்களைக் கண்காணித்து தடுப்பணை கட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் சசிகலா விடுதலையாகி சென்னைக்கு வந்த ஒரு மாதத்துக்குள் அரசியலைவிட்டும் விலகிக்கொண்டார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மட்டும் தைரியமாக அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று களத்தில் குதித்து முதல்கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு அதிமுகவினருக்கு பீதியை உருவாகியுள்ளார்.

தினகரன் மூவ்மெண்ட்டுகளை கவனமாகக் கவனித்து வந்த முதல்வர், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அமமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமமுக அறிவித்துள்ள வேட்பாளர்களை அதிமுக பக்கம் இழுத்து வாருங்கள் என்பதுதான் அந்த அசைன்மென்ட்.

முதல்வர் உத்தரவை ஏற்று அமமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுக்கு வலைவீசி வருகிறார்கள் அதிமுக,வினர்.

திருச்சி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வீசிய வலையில் முதலில் சிக்கியிருப்பவர் திருச்சி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சீனிவாசன்.

சீனிவாசனை சந்திக்க 10ஆம் தேதி, காலை 6.00 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அமமுக மாவட்டச் செயலாளர் சீனிவாசனும் அன்று அதிகாலை 5.30 மணிக்குப் பசுமை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்றார்கள்.

காலையிலேயே ஃப்ரஷ்ஷாக விசிட்டர் அறைக்குள் காலை 5.50 வந்தார் முதல்வர். காத்திருந்த சீனிவாசன் முதல்வருக்குப் பூங்கொத்து கொடுத்து பொன்னாடைப் போர்த்தினார். பதிலுக்குச் சீனிவாசனுக்குப் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றவர், ‘ அம்மா இருக்கும்போது நீங்கள் கழகத்துக்குக் கடுமையாக கஷ்டபட்டீங்க. நீங்க மட்டுமில்ல உங்களைப்போல பலரும் அங்க இருக்காங்க. அவங்களையும் தாய்க் கழகத்துக்கு அழைச்சிட்டு வாங்க’என்று கூறியுள்ளார்.

நாம் சீனிவாசனைத் தொடர்புகொண்டு கட்சி தாவியது பற்றிக் கேட்டோம்.

“ நான் கட்சி தாவவில்லை. அம்மாவின் கட்சி அதிமுக. அதனால் வந்துட்டேன், எனக்கு கோடிக்கணக்கில் கடனாகிவிட்டது, மிகவும் சோர்ந்த நிலையிலிருந்தேன் அதிமுகவிலிருந்து தொடர்ந்து பேசினார்கள். முதல்வரைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது அவரது அருமையும் உழைப்பும். காலையில் ஆறு மணிக்குத் தொண்டனைச் சந்திக்கிறார். குடும்ப நலனைப் பற்றி விசாரித்தார். திருச்சியில் கட்சி எப்படியிருக்கிறது நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து கட்சியைப் பலப்படுத்துங்கள் என்றபோது என் கண்கள் கலங்கிவிட்டது” என்றார்.

சீனிவாசன் அதிமுகவுக்கு சென்றது பற்றி தினகரன், “எனக்கு நெடுநாள் நண்பர். ரொம்ப நெருக்கடியா இருக்கு நான் அங்க போறேனு என்கிட்ட சொன்னார். நான் ஒண்ணும் சொல்லல. அவரை கட்சியை விட்டு நீக்கக் கூட நான் சொல்லலை” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுகவில் சீட் கிடைக்காத ராஜவர்மன் போன்றவர்கள் அமமுகவுக்கு வந்த நிலையில், அமமுகவில் இருந்து மாவட்டச் செயலாளர் சீனிவாசன் அதிமுக சென்றிருக்கிறார். இவர் போல இன்னும் பலரை இழுக்க அதிமுக தயாராகிறது. இன்று மாலை வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தும் அமமுக வேட்பாளர்களைத் தக்க வைக்கவும் போராடி வருகிறது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 12 மா 2021