மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

சீட்டுக்குப் போராடி வென்ற உதயநிதி

சீட்டுக்குப் போராடி வென்ற உதயநிதி

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 12) பகல் 12 மணிக்கு மேல் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரியதாக இருந்த திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கி தனது கொளத்தூர் தொகுதியில் முடித்த ஸ்டாலின்... சென்னை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்தபோது எதிர்பார்ப்பு எகிறியது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் என்று பெயர் வாசிக்கப்பட அறிவாலய அரங்கிலேயே ஆரவாரம் எழுந்தது.

வாரிசு அரசியல் என்ற அஸ்திரம் திமுக மீது தொடர்ந்து வீசப்படும் என்பதாலும் உதயநிதியை ஒரு தொகுதிக்குள் அடைத்துவைக்க வேண்டாம் என்று சொன்னதாலும்... உதயநிதிக்கு சீட் கொடுக்க தயங்கினார் ஸ்டாலின். இதை உதயநிதியையே கூப்பிட்டு சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் கூறினார். ஆனால் உதயநிதியோ, நான் கண்டிப்பாக நிற்பேன் என்று தன் வட்டாரத்தில் கூறிவந்தார்.

கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்காக திருச்சி மாவட்ட திமுகவினர் சிலர் லால்குடி தொகுதியை கேட்டு விருப்ப மனு பணம் கட்டியிருந்தனர். எ.வ.வேலு மகன் கம்பன், ஜெகத்ரட்சகன் மகன் ஆகியோருக்காகவும் சீட் கேட்டு அவரது ஆதரவு வட்டத்தினர் முயற்சி எடுத்தனர். இவர்கள் எந்த வகையிலும் சீட் கேட்காவிட்டாலும் அவர்களுக்காக வேறு சிலர் சீட் கேட்டதன் அடிப்படையில்... இவர்களுக்கெல்லாம் போன் போட்ட ஸ்டாலின், “இந்த முறை உதயநிதிக்கே சீட் கொடுக்கறதில்லை”னு முடிவு பண்ணியிருக்கேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் உதயநிதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு விருப்ப மனுவை தனக்காக பலர் கொடுத்தாலும் தானே கொடுத்தார். நேர்காணலிலும் பங்கேற்றார்.நேர்காணலில் பங்கேற்ற உதயநிதி தன்னிடம் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் கேள்விகள் கேட்டதையும் பற்றி பகிர்ந்துகொண்டார். ‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க?”என்று கேட்டதற்கு, ‘எங்க அப்பா எவ்வளவு கொடுக்குறாரோ அதை வீட்டுக்கு எடுத்துட்டு போகாம எல்லாத்தையும் செலவு பண்ணுவேன்’ என்று சொன்னதாக வெளிப்படையாக பேசினார். அதன் மூலம் தான் தேர்தலில் போட்டியிடுவதை அப்போதே உறுதிப்படுத்தினார்.

சில நாட்கள் முன்புவரை உதயநிதிக்கு சீட் இல்லை என்ற முடிவிலேயே ஸ்டாலின் இருக்க அவரிடம் உரிமையோடும் கோபத்தோடும் போராடியே சீட் வாங்கியிருக்கிறார் உதயநிதி.

தேர்தலில் நிற்பது உறுதியானதும் அண்ணா - கலைஞரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய உதயநிதி, கோபாலபுரத்துக்கு சென்றார் சிஐடி காலனி இல்லத்துக்கு சென்று கனிமொழியிடம் வாழ்த்து பெற்றார். மறைந்த பேராசிரியரின் இல்லத்துக்கும் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.

அடுத்து அமையப்போகும் ஆட்சியில் உதயநிதிதான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று அறிவாலயத்தில் இன்றே குரல்கள் பலமாக ஒலிக்கின்றன.

-ராஜ்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வெள்ளி 12 மா 2021