மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

திருச்செந்தூர்: 6ஆவது முறையாக களமிறங்கும் அனிதா

திருச்செந்தூர்: 6ஆவது முறையாக களமிறங்கும் அனிதா

தொடர்ந்து 6 வது முறையாக திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக உடன்குடி ஓன்றியம் தண்டுபத்தைச் சேர்ந்தஅனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அதிமுக அமைச்சரவையில் கால்நடை,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஏ.டி.கே.ஜெயசீலனை தோற்கடித்தார். 2009 ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனைத் தோற்கடித்தார்.

2011 இம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் பி.ஆர்.மனோகரனைத் தோற்கடித்தார். 2016 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட சமக தலைவர் நடிகர் சரத்குமாரை சுமார் 25,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்போது இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார்.

68 வயதாகும் இவருக்குச் சொந்தமாக மதுரையில் பாத்திர உற்பத்தி மற்றும் வியாபாரமும் நடந்து வருகிறது.பத்தாம் வகுப்பு வரை படித்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஜெயகாந்தி என்ற மனைவியும், அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் என மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை. பி.காம் பட்டதாரியான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் திருச்செந்தூர் தாலூகா ஆறுமுகநேரியை சேர்ந்தவர். 09.02.1982 இல் பிறந்த இவருக்கு ஆர்.அனிதா ராதாகிருஷ்ணன் என்ற மனைவியும், கவிஷ் (10),நிவிகேஷ் (5) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

2001 முதல் அதிமுகவின் உறுப்பினரான இவர் தற்போது அதிமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இத்தொகுதியில் அமமுக மநீம கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தினாலும் போட்டி திமுக,அதிமுக விடையே மட்டும் நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

சக்தி பரமசிவன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 12 மா 2021