மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் ஏன்?: நயினார் நாகேந்திரன்

முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் ஏன்?: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளராகக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (மார்ச் 12) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜகவுக்கு 20தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்ய பாஜக தமிழக தலைவர் முருகன் டெல்லி சென்றுள்ளார்.

20 தொகுதியில் ஒன்றாகத் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்சித் தலைமை இன்று முற்பகல் வரை வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், பாஜகவின் துணைத் தலைவரான, திருநெல்வேலியில் பிரபலமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி

பாஜக வேட்பாளராக என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகும். நல்ல நேரத்தைக் காரணம் கருதி வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தேன். திருநெல்வேலி தொகுதியில் ஐந்தாவது முறையாகப் போட்டியிடுகிறேன். ஜவுளி பூங்கா உள்பட இத்தொகுதிக்குத் தேவை உள்ள அனைத்து திட்டங்களையும் வெற்றி பெற்றால் செய்து முடிக்க அயராது உழைப்பேன். இத்தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்

வேட்புமனு தாக்கலின் போது அவரது இளைய மகன் விஜய் மட்டுமே உடன் இருந்தார். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டும், கடந்த மக்களவை தேர்தலில். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்றார் நயினார் நாகேந்திரன்.

-சக்தி பரமசிவன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

வெள்ளி 12 மா 2021