மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

பாஜக, காங்கிரஸை எதிர்த்து கமல் போட்டி!

பாஜக, காங்கிரஸை எதிர்த்து கமல் போட்டி!

முதல்முறையாகச் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, அப்துல் கலாம் விஷன் 2020, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆகிய கட்சிகள் தற்போதைக்கு உள்ளன.

மநீம சார்பில் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்.   இதன்மூலம், முதல்முறையாகத் தேர்தலில் களம் காண்கிறார். மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியா, முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தாசப்பராஜ், தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையா, சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன்  ஆகியோர் களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கில் போட்டியிடுவது தொடர்பாகப் பேசிய கமல்ஹாசன், கொங்கு மண்டலத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. அதனால் தான் நானே களமிறங்குகிறேன். கோவை மக்களுக்கு என்னை நிறையப் பிடிக்கும். என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்குக் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக  கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்குக் கோவை  தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆனால், பாஜக, காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 12 மா 2021