மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

ஈபிஎஸ், ஓபிஎஸை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்!

ஈபிஎஸ், ஓபிஎஸை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்!

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்பது தெரியவந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர். தமிழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. சனி ,ஞாயிறு தவிர மார்ச் 19ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதன்படி இன்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதனிடையே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த நிலையில் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 11) வெளியிட்டார்.

இதில், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 12 மா 2021