மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

தேமுதிக அமமுக கூட்டணி : இன்று முடிவு!

தேமுதிக அமமுக கூட்டணி : இன்று முடிவு!

தேமுதிக அமமுக கூட்டணி குறித்து இன்று முடிவாகும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 12) தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனியாகக் களம் காண்கிறதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகிய தேமுதிக, அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, அமமுகவிடம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்தியதாகவும், இன்று தேமுதிக கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்தை டிடிவி தினகரன் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி முடிவு இன்று தெரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார் தினகரன்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேமுதிகவுடனான கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தினகரன், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இன்று அதைபற்றிய முடிவு கிடைக்கும் என்றார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்துப் பேசிய அவர், மாபெரும் வெற்றியைக் கோவில்பட்டி மக்கள் தருவார்கள். அங்கு வெற்றிபெறுவது நிச்சயம் என்றார். மேலும் வேட்பாளர் பட்டியல், தான் போட்டியிட இருக்கும் மற்றொரு தொகுதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 12 மா 2021