மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

கைமாறிப்போன தொகுதிகள்: அதிருப்தியில் குஷ்பு, கௌதமி

கைமாறிப்போன தொகுதிகள்: அதிருப்தியில் குஷ்பு, கௌதமி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், பாஜக ஆவலோடு எதிர்பார்த்த ராஜபாளையம், திருவல்லிக்கேணி தொகுதிகள் கிடைக்காததால் தொகுதிக்குள் ஆறு மாதமாக முகாமிட்டு கட்சிப் பணியாற்றிய நடிகைகள் கௌதமி, குஷ்பு அதிருப்தியில் உள்ளனர்.

நடிகை கௌதமி, பாஜகவில் இணைந்ததும் ராஜபாளையம் தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுக் கடந்த சில மாதங்களாக அவர் ராஜபாளையத்தில் முகாமிட்டுத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ராஜபாளையம் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை.

நடிகை கௌதமி தனக்குத் தொகுதி கிடைக்காத நிலையில் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

“ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்துக் கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன்” பாடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவுக்குப் பாராட்டு தெரிவித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விருதுநகர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இங்கு நடிகை கௌதமி போட்டியிடுவார் என்பது சந்தேகமே என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

பாஜகவில் இணைந்ததும் குஷ்புவுக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த தொகுதியின் பாஜக வேட்பாளரும் அவர்தான் என்று முடிவு செய்து கடந்த சில மாதங்களாகவே இந்த தொகுதியில் தேர்தல் பணியை குஷ்பு தொடங்கி விட்டார். அண்ணா சாலையில் பிரமாண்ட தேர்தல் பணிமனையையும் அவர் அமைத்துள்ளார். இங்குத் தினமும் வந்து தேர்தல் பணிகளைச் செய்து வந்தார்.

இப்போது சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். குஷ்பு திருநெல்வேலி பிரச்சாரத்திற்கு வந்தபோது சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மனநிலையிலேயே இருந்தார். இப்போது தொகுதி மாறிப்போனது.

அதேபோல் மைலாப்பூர் தொகுயை குறி வைத்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கடந்த 6 மாதமாகத் தொகுதியில் தேர்தல் பணி செய்து வந்தார். அதற்காக அங்குள்ள ஒரு திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டுத் தேர்தலை மையமாக வைத்து 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதேபோல் போட்டியிட விரும்பிய தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சித் தலைமையும் இஷ்டமான தொகுதி பாஜகவுக்குக் கிடைக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சக்தி பரமசிவன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 12 மா 2021