மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

வேட்பு மனுதாக்கல்: இன்று தேர்தல் உற்சவம் முறைப்படி தொடக்கம்!

வேட்பு மனுதாக்கல்: இன்று  தேர்தல் உற்சவம் முறைப்படி தொடக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் உற்சவத்தின் முதல் பகுதியான வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது. இதற்காக கொரோனா கட்டுப்பாட்டுகளைக் கருத்தில்கொண்டு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. அதன் முதல் கட்ட தேர்தல் நடவடிக்கையாக வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 ஆகும்.

இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று நேற்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிராத சாகு தெரிவித்தார்.

“வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் டவுன்லோடுசெய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாண பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து அளிக்கலாம். நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம். ஆனால் ஆன்லைன் மூலம் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலமாக அளிக்கும் வசதியை இந்த தேர்தலில் அறிமுகம் செய்திருக்கிறோம். நேரடியாகவும் அவர்கள் டெபாசிட் தொகையை அளிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரமாகும், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம்

வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் முன்பு 5பேர் உள்ளே செல்ல முடியும். இப்போது 2 பேர் மட்டும் செல்லலாம். வேட்பு மனுத்தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தில் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது”என்று தெரிவித்தார் சாகு.

சமூக இடைவெளியை கடைபிடித்து ஊர்வலம் நடத்தலாம்.அதை மீறினால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 12 மா 2021