மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மோடி - ஜோ பைடன் நாளை பேச்சுவார்த்தை!

மோடி - ஜோ பைடன் நாளை பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி முதன்முறையாக நாளை (மார்ச் 12) அதிகாரபூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ (Quad - Quadrilateral Security Dialogue). இந்த நான்கு நாடுகளும் ராணுவ பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி உட்பட பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்துகொள்ளும்.

முக்கியமாக கடற்படை போர் பயிற்சிகளை குவாட் நாடுகள் பலமுறை ஒன்றாகச் செய்துள்ளன. சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில் குவாட் கூட்டமைப்பு அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில் குவாட் அமைப்பின் முதல் உச்சி மாநாடு நாளை (மார்ச் 12) காணொலி மூலம் நடக்கிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

கடல் போக்குவரத்து, எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு மருந்து, பொருளாதார மந்தநிலை குறித்து இவர்கள் விவாதிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி முதன்முறையாக அதிகாரபூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை டெலிபோனில்தான் பேசி உள்ளார். இதில் ஒருமுறை அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் குவாட் கூட்டத்தில் ஜோ பைடனுடன் மோடி பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் தனித்தனி ஆலோசனையில் ஈடுபடுவார்களா என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை.

-ராஜ்

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வியாழன் 11 மா 2021