மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ஒண்ணாவது கொடுங்க.. தொகுதி பெறுவதிலும் பாஜகவுக்கு தொங்கல்!

ஒண்ணாவது கொடுங்க.. தொகுதி பெறுவதிலும் பாஜகவுக்கு தொங்கல்!

புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக இரண்டு கூட்டணிகளிலும் தொகுதிகள் அறிவிப்பில் தாமதமாகி, இழுபறியானது. சற்று நேரத்துக்கு முன்னர்தான் காங்கிரஸ், திமுக அணி தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில், அந்தக் கட்சிக்கு 16 தொகுதிகளும் திமுகவுக்கு 14 தொகுதிகளும் அதற்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றும் என முதலில் பேசினார்கள். பின்னர், திமுகவும் காங்கிரசும் பாதிக்குப்பாதி அதாவது 14+14, மீதம் இரண்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு என திமுகவின் பொறுப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ.வும் மாநிலச் செயலாளர் சிவக்குமாரும் பேசினார்கள். ஆனால், அதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கமறுத்துவிட்டார்.

அதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க, சிவாவும் சிவக்குமாரும் சென்னைக்குச் சென்றனர். தன்னைச் சந்தித்த அவர்களிடம், காங்கிரஸ் கட்சியைவிட அதிகமோ குறைவாகவோ இல்லாமல் சமமாக தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளுமாறு ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறுகின்றனர். சென்னைக்குச் சென்றவர்கள் புதுவை திரும்பியதும் இதில் சுமுகமான தீர்வு காணப்படும் என்றார்கள் அந்தக் கூட்டணி தலைவர்கள்.

சொன்னபடியே சற்று நேரத்துக்கு முன்னர் தொகுதி உடன்பாடும் அறிவிக்கப்பட்டது.காங்கிரஸ் கூட்டணியில்தான் இப்படி என்றால், பாஜக கூட்டணியிலும் தொகுதியை எடுத்துக்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. எண்ணிக்கை பிரச்னை முடிந்த அளவுக்கு, இது அவ்வளவு எளிதாக இல்லை.

என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்கள், பாஜகவுக்கு 14 இடங்கள், அதிமுகவுக்கு 4 இடங்கள் என உடன்பாடு ஏற்பட்டது அல்லவா? இதில், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி, மண்ணடிப்பட்டு ஆகிய தொகுதிகளை விட்டுத்தர முடியாது என உறுதியாக நிற்கிறார். மண்ணடிப்பட்டு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. ரமேஷ். அவருக்கே மீண்டும் சீட் கொடுக்க விரும்புகிறார், ரங்கசாமி.

தட்டாஞ்சாவடி தொகுதியில், அண்மையில் திமுகவிலிருந்து விலகி தன் கட்சியில் சேர்ந்த செந்திலுக்குக் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த இரண்டு தொகுதிகளையும் தங்களுக்கு தரவேண்டும் என பாஜகவும் அடம்பிடிக்கிறது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பாஜகவில் சேர்ந்த வெங்கடேசனுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியைக் கேட்கிறார்கள். காங்கிரஸ் அமைச்சராக இருந்து பாஜகவில் ஐக்கியமான நமச்சிவாயத்துக்கு மண்ணடிப்பட்டு தொகுதியைப் பெற்றுத்தர போராடிவருகிறது, பாஜக.

ஆனால் இரண்டு தொகுதிகளையும் அவர்கள் இருவருக்கும் விட்டுவிடாமல், தனக்கு வேண்டியவர்களுக்குத் தருவதில் உறுதியாக இருக்கிறார், ரங்கசாமி.

இரண்டு தொகுதிகளில் ஒன்றையாவது கேட்டுப்பெறுவது என்பதில் ரங்கசாமியிடம் மல்லாடிக்கொண்டிருக்கிறது, பாஜக தரப்பு.

சும்மாவா, முதலமைச்சர் பதவி என பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நமச்சிவாயத்துக்கு போட்டியிடவே வாய்ப்பு இல்லை என்றால்..?!

- வணங்காமுடி

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 11 மா 2021