மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

திமுகவிடம் போராடி வென்ற காங்கிரஸ்!

திமுகவிடம் போராடி வென்ற காங்கிரஸ்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி, திருபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி,திருவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க,ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் மூலம் திமுக கூட்டணிக்குள் இருந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளது. நாளை திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவது இதன்மூலம் உறுதியாகிவிட்டது.

திருவாடானை, நாங்குநேரி, தென்காசி, வேளச்சேரி, அறந்தாங்கி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் போராடி வென்றிருக்கிறது. அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்க இருப்பதாக தகவல் அறிந்து நேற்றே திமுகவினர் அங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அறந்தாங்கி காங்கிரஸுக்கே போயிருக்கிறது.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 11 மா 2021