மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

சாத்தூர் எம்எல்ஏ அதிமுகவிலிருந்து நீக்கம்!

சாத்தூர் எம்எல்ஏ அதிமுகவிலிருந்து நீக்கம்!

சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத நிலையில், இன்று (மார்ச் 11) அவர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். அவரை அதிமுகவிலிருந்து விலக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வரானார். அவரது ஆட்சிக் காலம் பொற்கால ஆட்சிக் காலமாக இன்றும் போற்றப்படுகிறது. கடந்த 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றிபெற்றார்.

சாத்தூர் தொகுதியில் 3 முறை இந்திய தேசிய காங்கிரஸும், ஒரு முறை பார்வர்டு பிளாக் கட்சியும், 4 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றிபெற்றன. 2006ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், 2011ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி.உதயகுமாரும் வெற்றிபெற்றனர். 2016 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெற்றிபெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக அணி இரண்டாக உடைந்த பின்னர் டிடிவி தினகரன் தலைமையில் 22 எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதில் 18 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். திமுக தலைவர் கருணாநிதி மறைவு உள்ளிட்ட சில காரணங்களால் 22 தொகுதிகளுக்கு கடந்த மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் திமுக, அதிமுக மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டன. அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற 4 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில் அதிமுக போட்டியிட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வென்றது.

இதில் சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக சீனிவாசன் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வலதுகரமாக செயல்பட்ட ராஜவர்மன் எதிரியானார்.அமைச்சருக்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார். விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகம் இரண்டாக பிரித்தபோது கிழக்கு மாவட்டத்திற்கு செயலாளராக முயற்சித்தார். அதிமுக தலைமையோ முன்னாள் சபாநாயகர் காளிமுத்து உடன்பிறந்த தம்பி ரவிச்சந்திரனை மாவட்டச்செயலாளராக அறிவித்து இப்போது சாத்தூர் தொகுதி வேட்பாளராக இவரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ராஜவர்மன் சாத்தூர், சிவகாசி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்திய நிலையில் அவருக்கு இடம் கிடைக்காததால் தற்போது அமமுகவில் இணைந்துள்ளார்.

-சக்தி பரமசிவன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 11 மா 2021