மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

தேமுதிக விலகியதற்கு பாமக காரணமா?

தேமுதிக விலகியதற்கு பாமக காரணமா?

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதற்கு பாமக காரணமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி.

அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தேமுதிக. இந்த முடிவால், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களான இரட்டை இலை,தாமரை மட்டுமே இடம் பெற்றிருந்தது. அப்போது கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவின் முரசு சின்னம் இடம்பெறவில்லை. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்படாததால் சின்னம் புறக்கணிப்பு என்று தகவல் வெளியானது.

இதையடுத்து பாமகவால் தான் தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியதாகப் பேச்சுக்கள் அடிப்பட்டன. இதுதொடர்பாக இன்றைய (மார்ச் 11) செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, “அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதற்கு பாமக காரணம் இல்லை. நாங்கள் எந்த இடத்திலும் தேமுதிகவைப் பற்றி எந்த விதமான விமர்சனமும் செய்தது இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழக அரசு கடன் சுமையிலிருந்தாலும் முதல்வரின் நலத்திட்டங்களை வரவேற்கிறது. பாமக தனது கொள்கையிலிருந்து எப்போதும் மாறவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வியாழன் 11 மா 2021