மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ஊழலற்ற ஆட்சியாக பாஜக இருக்கிறது: செந்தில்

ஊழலற்ற ஆட்சியாக பாஜக இருக்கிறது: செந்தில்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய நடிகர் செந்தில் இன்று (மார்ச் 11) பாஜகவில் இணைந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு அமமுகவில் இணைந்தார். அமமுகவில் செந்திலுக்குக் கட்சி அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 2020ல், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இனைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக ஊழற்ற ஆட்சியாக இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “1988ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவிலிருந்தேன். ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன். தற்போது எந்த கட்சிக்குப் போவது எனத் தெரியாத நிலை இருந்தது. ஒரு நல்ல கட்சிக்குச் செல்ல வேண்டும் என நினைத்தேன். பாஜக தான் நல்ல கட்சி. எல்லோருக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் பாஜகவில் கிடைக்கும். எனவே, பாஜகவில் சேர நினைத்தேன். இன்று இணைந்துவிட்டேன்.

இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள். பாஜகதான் இனி வளரும். வேறு எந்த கட்சியையும் இனி யாரும் நம்ப மாட்டார்கள். ஊழல் செய்பவர்களைத் தட்டிக் கேட்பார்கள். ஊழலற்ற ஆட்சியாக பாஜக இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக இந்த கட்சி காலூன்றும்” என்று கூறினார்.

எனக்கு ஏதோ பிடிக்கவில்லை, அதனால் அதிமுகவிலிருந்து ஒதுங்கிவிட்டேன் என்று தெரிவித்த செந்திலிடம், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ’தலைமை சொல்வார்கள்’ என்று தெரிவித்த செந்தில் பாஜகவுக்கு 100 சதவிகிதம் பிரச்சாரம் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

-பிரியா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வியாழன் 11 மா 2021