மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன்

அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன்

அமமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 11) வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி. சிவகாசி மக்களவை தொகுதியில் இடம்பெற்றிருந்த கோவில்பட்டி தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளை உள்ளடக்கி உள்ளது.

2011, 2016-ம் ஆண்டு தேர்தலில் கடம்பூர் ராஜூ இரண்டு முறை வெற்றி பெற்றார். 2016இல் அமைச்சராக ஆன கடம்பூர் ராஜூ, இந்த தொகுதியில் இருந்து முதல் முறையாக அமைச்சரான எம்.எல்.ஏ. என பெயர் பெற்றார். இந்த தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு முதல் இதுவரை இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை 1 முறையும் வென்றுள்ளன.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 385 பேரும், 3ஆம் பாலித்தனவர்கள் 31 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 பேர் உள்ளனர்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேவர், நாடார், நாயக்கர் சமுதாய வாக்குகள் பிரதானமாக உள்ளது. அடுத்தபடியாக தலித் வாக்குகள் உள்ளன. மேலும் செட்டியார், கோனார், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர்.

தற்போது இத்தொகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை தமிழகத்தில் பலருக்கு ஆச்சரியம் கலந்த வியப்பாக டி.டி.வி.தினகரன் இத்தொகுதியில் போட்டியிட தேர்வு செய்துள்ளதாகும்.

-சக்தி பரமசிவன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 11 மா 2021