மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

வேட்பாளர் பட்டியல்: ஸ்டாலினுக்கு சீனியர்கள் தரும் நெருக்கடி!

வேட்பாளர் பட்டியல்:  ஸ்டாலினுக்கு சீனியர்கள் தரும் நெருக்கடி!

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

தன் குடும்பத்தார் உட்பட யாருடைய சிபாரிசுக்கும் இடம் தராமல், ஐபேக்கின் பட்டியல், மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த பட்டியல் இரண்டையும் ஆய்வு செய்து குறுக்கு விசாரணை செய்து யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்கே இம்முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து மின்னம்பலத்தில் வேட்பாளர் பட்டியல்: திமுகவில் நடக்கும் ஆச்சரியம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சீனியர்களின் நெருக்கடி அதிகமாகி வருவதாக கூறுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

“திமுக வேட்பாளர் பட்டியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ரகசியத்தையும், சிபாரிசுகளைக் கடந்த கறார் தனத்தையும் கண்டு தலைமைக் கழக நிர்வாகிகளே ஒரு கணம் திகைத்துவிட்டனர். இந்நிலையில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதிலிருந்து, திமுகவில் யாருக்கு வாய்ப்பு என்பது வரை கடந்த இரு நாட்களாக சீனியர்கள் ஒரு சிண்டிகேட் வைத்து செயல்படுகிறார்கள்.

தங்களுக்குப் பிடிக்காத துடிப்பான வேட்பாளர்களைப் பற்றி ஸ்டாலினிடம், புகார்களைச் சொல்வது, ஒரு சீனியர் புகார் சொன்னால் அதை மற்ற சீனியர்களும் ஆமோதித்து, ‘அவருக்கு சீட் கொடுக்க வேண்டாம்’என்று ஸ்டாலினுக்கு மறைமுகமாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். இதனால் நேற்று முதல் மன அழுத்தத்தில் இருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 11 மா 2021