மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

‘வேட்பாளர், தொகுதிகளை மாற்று’ : தலைதூக்கும் போராட்டம்!

‘வேட்பாளர், தொகுதிகளை மாற்று’ : தலைதூக்கும் போராட்டம்!

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ,வேட்பாளர் போட்டி விபரம் வெளிவர துவங்கிய நிலையில் கட்சி நிர்வாகிகளின் "அந்த வேட்பாளரை மாற்று, தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காதே" போராட்டங்கள் தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கீழப்பாவூரில் அதிமுகவினர் இன்று (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் செய்தனர். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழப்பாவூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர்காரரான மனோஜ் பாண்டியனை மாற்றிவிட்டு, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட உள்ளூர்க்காரரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறையும் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகத் தகவல் வெளியானதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் அறந்தாங்கியில் ஊர்வலமாக சென்று கோ‌ஷங்கள் எழுப்ப, கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே அருகிலிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதி தி.மு.க.விற்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பி சென்றனர்

இதுபோல் பூந்தமல்லி தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதால், அதிருப்தி அடைந்த அதிமுகவினர் நசரத்பேட்டை சாலையின் சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி, விருத்தாசலம் தொகுதிகளிலும் பாமக வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆலங்குடி, பல்லடம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலுள்ள செய்யூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றக்கோரி ஏராளமான அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்த சுபபலனும் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை என்றார் ஒரு காவல்துறை அதிகாரி.

-சக்தி பரமசிவன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 11 மா 2021