மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

நாகைக்கு பதிலாக வால்பாறை - இ.கம்யூ. தொகுதிகள் முடிவானது!

நாகைக்கு பதிலாக வால்பாறை - இ.கம்யூ. தொகுதிகள் முடிவானது!

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று (மார்ச் 11) முற்பகல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து, தொகுதிகளை இறுதிப்படுத்தினார்கள்.

அதன்படி, பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் தனி தொகுதிகள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கோவை மாவட்டம் வால்பாறை ஆகியவை தனி தொகுதிகள் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மூன்று தொகுதிகள் பொதுத் தொகுதிகள்.

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திமுக தரப்பில் நாகை தொகுதியை எடுத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக சென்னை வேளச்சேரி தொகுதியை சிபிஐ தரப்பு கேட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் அந்தப் பகுதியில்தான் வசிக்கிறார். படித்தவர்கள், அரசுப் பணியாளர்கள் கணிசமாக இருக்கும் இந்தத் தொகுதி கிடைத்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது அவர்களின் கணக்கு.

ஆனால், வால்பாறை தொகுதியை திமுக தரப்பு சிபிஐ கட்சிக்கு தள்ளிவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரண்டு முறை சிபிஐ வெற்றிபெற்றுள்ளது; மூன்று முறை இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறது. இதை வைத்து, வால்பாறை தொகுதி ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- இளமுருகு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 11 மா 2021