மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

சசிகலாவால்தான் அதிமுகவை காப்பாற்றமுடியும்! அமமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.

சசிகலாவால்தான் அதிமுகவை காப்பாற்றமுடியும்! அமமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.

ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜவர்மனுக்கு நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடமில்லாத நிலையில் அவரது தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில்,இன்று (மார்ச் 11) அவர் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை சந்திக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன்,

“சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு ராஜேந்திரபாலாஜி ராஜபாளையத்துக்கு ஓடுவது ஏன்? உங்களுக்கு வேண்டிய ஆளுக்கு சீட். வேண்டாத ஆளுக்கு சீட் கிடையாது. மாற்றுக் கட்சியோடு தொடர்பு வைத்துக்கொண்டு இன்று முதல்வர், துணை முதல்வரிடம் பொய்யை சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.

ராஜபாளையத்தில் ஒன்றிய கவுன்சிலில் முழுமையாக அதிமுகவை வெற்றிபெறவைத்தோம். ஆனால் எங்களுக்கு சீட் இல்லை. சிவகாசி ஒன்றியத்தில் ராஜேந்திரபாலாஜி எத்தனை ஒன்றியம் ஜெயித்தார்?

30 பேர் அமைச்சர் ஆவதற்கும் 130 எம்.எல்.ஏ.ஆவதற்கும் கட்சியை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படுவதில்லை. நான் சாதாரண கூலித் தொழிலாளி, டிரைவராக இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் டிடிவி தினகரனை 1997 லேயே சந்தித்துள்ளேன். சாத்தூர் தொகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று டிடிவி தினகரனை சந்திக்க வந்துள்ளேன்” என்றவர்,

“சசிகலா ஒரு சமுதாயத்துக்கு உட்பட்டவர் அல்ல. அவர் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்தவர். எத்தனை அமைச்சர்களை அவர் உருவாக்கினார். இன்னிக்கு ஏதோ நீங்க பேச வேண்டிய இடத்தில் இருக்கீங்க. அவர் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். அம்மா உற்சவர், சின்னம்மா மூலவர். சின்னம்மாதான் இயக்கத்தையும், அம்மாவையும் இயக்கினார். அவர் அமைதியாக இருக்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. உங்கள் வரலாறை நாடு அறிய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் ஒதுங்கியிருக்கிறார். தேர்தலுக்குப் பின்னால் நிரந்தரமாக சசிகலாதான் அதிமுகவை காப்பாற்ற முடியும். எனவே என்னைப் போல பலரும் சசிகலாவிடம் வரத் தொடங்குவார்கள். நான் தான் ஆரம்பம்”என்றார்.

அதிமுகவில் சீட் இல்லாமல்தானே இங்கே வந்திருக்கிறீர்கள்?என்ற கேள்விக்கு, “இங்கே சீட் கிடைத்தால் சந்தோஷம், சீட் இல்லையென்றால் இரட்டை சந்தோஷம்” என்று கூறியிருக்கிறார் ராஜவர்மன்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 11 மா 2021