மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மம்தா மீது தாக்குதல்: அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்!

மம்தா மீது தாக்குதல்: அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்தது குறித்து அம்மாநில தலைமை செயலாளரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்பு, புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் கோயில் ஒன்றில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலர் மம்தா பானர்ஜியை தாக்கியதில் காயமடைந்தார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “ கோயிலிலிருந்து வெளியே வந்து காருக்குள் ஏற முயற்சி செய்தபோது, 4 அல்லது 5 பேர் என்னை தள்ளிவிட்டார்கள். அதில் எனது கால் கார் கதவில் இடித்து அடிப்பட்டது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். அந்த நேரத்தில் பாதுகாவலர்கள் யாருமே என் அருகில் இல்லை” என கூறினார்.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மம்தா பானர்ஜியின் இடது கணுக்கால், வலதுதோள்பட்டை, முன்கை , கழுத்தில் கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் இருப்பதாக மம்தா தெரிவித்தார். அதனால், அவர் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாநில அமைச்சரும், மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான சுப்ரதா முகர்ஜி கூறுகையில், “அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பலர் விரும்பவில்லை. தேர்தல் பணியிலிருந்து அவரை விலக்கி வைக்க விரும்புகின்றனர். அதனால்தான், மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு மக்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள்” என தெரிவித்தார்.

”சாதாரணமாக விபத்தினால் கூட அவர் கீழே விழுந்திருக்கலாம். வேண்டுமேன்றே அவர் தள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவரை சுற்றிலும் எப்போதும் பாதுகாப்பிற்கு வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதுபோன்ற தந்திரங்களை பயன்படுத்தி மக்களிடமிருந்து அனுதாபத்தை பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் குழுவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மம்தா பானர்ஜி காயமடைந்தது குறித்து விரிவான அறிக்கையை தலைமை செயலாளரிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

வினிதா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வியாழன் 11 மா 2021