மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

6 சீட்...இரட்டை இலை: வருத்தத்தை வெளிக்காட்டாத வாசன்

6 சீட்...இரட்டை இலை: வருத்தத்தை வெளிக்காட்டாத வாசன்

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவோடு பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து பாமக வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் பாஜகவும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கத் தயாராகிறது. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இன்று வரை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதுவும் குறிப்பாக நேற்று (மார்ச் 10) அதிமுக அறிவித்த இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமாகா சார்பில் விருப்பமாக கேட்கப்பட்ட.... வால்பாறை (கோவை தங்கம்), காங்கேயம் (விடியல் சேகர்), பாபநாசம் (சுரேஷ் மூப்பனார்), மயிலாப்பூர் (முனவர் பாட்சா) மற்றும் திருத்தணி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதனால் தமாகா இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டது. வாசனுக்கே இந்தப் பட்டியலைப் பார்த்ததும் சற்று அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. ஆனாலும் பொறுமையாக மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்றும் ஆலோசனை நடத்தினார்.

“ முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது முதலில் ஆதரித்தது தமாகா. நாங்கள் அதிமுக கூட்டணியில் 12 கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் 6 தொகுதிகள் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி நாங்கள் மீண்டும் அதிமுகவிடம் பேசி வருகிறோம். எங்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை இருக்கிறது” என்றவரிடம்,

“தொகுதிகளின் எண்ணிக்கை, விருப்பமான தொகுதிகள் இரண்டும் கிடைக்காத நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக வெளியேறிவிட்டது. தமாகா என்ன முடிவெடுக்கப் போகிறது?”என்று ஒரு செய்தியாளர் கேட்க,

“நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நீங்கள் நம்பிக்கையில்லாமல் கேட்கிறீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு காலக்கெடு கிடையாது. தமாகாவின் கோரிக்கையை அதிமுக ஏற்கும் என்று நம்புகிறேன். மேலும் நான் வெற்றியின் அடிப்படையிலேயே தொகுதிகளைக் கேட்டிருந்தோம். எங்கள் கட்சி நிர்வாகிகளின் முகங்களின் அடிப்படையில் அல்ல. எங்களைப் பொறுத்தவரை தமாகாவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். கௌரவமான தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது”என்றார் வாசன்.

சைக்கிள் சின்னம் தொடர்பான கேள்விக்கு, “கடைசி நிமிடம் வரை சைக்கிள் சின்னத்துக்கான போராட்டம் தொடர்கிறது. அது நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. அந்த போராட்டத்தில் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன்”என்று கூறியுள்ளார்.

அதிமுக வட்டாரங்களில் தமாகா பற்றி விசாரித்தபோது, “வாசன் நல்ல தலைவர்தான். ஆனால் 12 சீட்டுகள் தரும் அளவுக்கு தமாகா பலமாக இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மேலும் அவருக்கு சைக்கிள் சின்னமும் இப்போது வரை உறுதியாகவில்லை. எனவே 6 தொகுதிகளில் நின்றாலும் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்கவேண்டும்.”என்கிறார்கள்.

-வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வியாழன் 11 மா 2021