மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

நாகை வேண்டாம், வேளச்சேரி தாங்க.. திமுகவிடம் கேட்கும் சிபிஐ!

நாகை வேண்டாம், வேளச்சேரி தாங்க.. திமுகவிடம் கேட்கும் சிபிஐ!

திமுக அணியில் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவடைந்துவிடும் எனக் கூறப்படும் நிலையில், இடதுசாரிக் கட்சிகளுக்கான ஓரிரு தொகுதிகளால்தான் முடிவு தாமதம் என்று கூறுகிறார்கள்.

இரண்டு இடதுசாரி கட்சிகளுக்குமே தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்சிகளுமே தங்களின் நெடுங்கால செல்வாக்குப் பகுதிகளையே ஒதுக்குமாறு கேட்டிருக்கின்றன. ஆனால் கூட்டணிக்கு உள்ளேயே குறிப்பிட்ட தொகுதிகளைப் பிடிப்பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆர்வம் காட்டின.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில், சிபிஎம் கட்சியின் இப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ளார். முதலில் அந்தக் கட்சி இந்தத் தொகுதியைக் கேட்டது. பிறகு கட்சிக்குள் நடைபெற்ற விவாதத்தில் மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணன் இருப்பதால், தேர்தலில் போட்டியிடுவது சரிவராது என விவாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் தரப்பிலேயே சிதம்பரத்தைக் கைவிட, அதைக் குறிவைத்திருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

நாகர்கோவில், மதுரை வடக்கு, திண்டுக்கல், திருப்பூர் தெற்கு, கோவை, கீள்வேளூர், சென்னையில் பெரம்பூர் அல்லது திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் ஆறு தொகுதிகளை ஒதுக்குமாறு சி.பி.எம். கேட்டுக்கொண்டது. இதில் மதுரை வடக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள், தோழர்கள் வட்டாரத்திலேயே! ஆனாலும், எங்களின் செல்வாக்குப் பகுதியை எளிதில் விட்டுவிடவும் முடியாது அல்லவா என்கிறார்கள்.

சிபிஐ கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் வடக்கு, சிவகங்கை, பவானி சாகர் ஆகிய தொகுதிகள் உறுதியாகி உள்ளன. இத்துடன், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதியையும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியையும் வேண்டுமென சிபிஐ கட்சி வலியுறுத்திக் கேட்கிறது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிபிஐ கட்சி ஒன்பது முறை வெற்றிபெற்றுள்ள தொகுதி என்பதால், அதை அவர்கள் விட்டுவிட விரும்பவில்லை. இதைப்போலவே தளி தொகுதியிலும் சிபிஐ கட்சிக்குத் தொடர் வெற்றி கிடைத்துவந்திருக்கிறது. கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் சர்ச்சைக்குரிய தளி ராமச்சந்திரன் இங்குதான் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்; அவரையே சிபிஐ கட்சி மீண்டும் நிறுத்தலாம் என கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் காவிரி டெல்டா என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என இருந்தது, இப்போது இல்லாவிட்டாலும், முதலுக்கு மோசமில்லை எனும் நிலைமை நிலவுகிறது. ஆனாலும் திமுக ஒதுக்கிய நாகை தொகுதியை விட்டுவிட்டு சென்னை, வேளச்சேரி தொகுதியைக் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறது, சிபிஐ கட்சி.

- இளமுருகு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

வியாழன் 11 மா 2021