மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

பாமக வேட்பாளர் பட்டியல் எப்படி?

பாமக வேட்பாளர் பட்டியல் எப்படி?

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 19 தொகுதிக்கான வேட்பாளர்களை நேற்று (மார்ச் 10) இரவு அறிவித்துள்ளது .

முதல் கட்ட அறிவிப்பில் 10 வேட்பாளர்களும் அடுத்துவந்த அறிவிப்பில் 9 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பெண்ணாகரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பாமக பொருளாளரான திலகபாமா போட்டியிடுகிறார். திமுகவின் வேட்பாளர் ஐ.பெரியசாமி என்று பலரும் கருதுகிற நிலையில், அவருக்கு எதிராக போட்டியிடுகிற பாமக வேட்பாளராக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த திலகபாமா பார்க்கப்படுகிறார்.

கீழ்பென்னாத்தூரில் மாநில அமைப்புச் செயலாளர் செல்வக்குமார் போட்டியிடுகிறார். இவர் அடித்தட்டிலிருந்து வந்தவர். கட்சிக்கு கஷ்டப்பட்டவர். தைலாபுரம் தோட்டத்தில் பணி செய்தவர். பொருளாதார வசதி இல்லாதவர்.

திருப்போரூர் தொகுதிக்கு திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ, ஜெயங்கொண்டம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு சொந்த தொகுதி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன், திருப்பத்தூர் டி.கே.ராஜா முன்னாள் எம்.எல்.ஏ, தருமபுரி வெங்கடேஷ்வரன், சேலம் மேற்கு அருள் என வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அருள் வன்னியர் சங்கத்திலும் கட்சியிலும் துவக்கத்திலிருந்து மாறாமல் பயணிப்பவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்தபோது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு தொகுதி கொடுக்கப்பட்டதும் ராமதாஸ் கட்டளையை ஏற்று விலகிக்கொண்டார். செஞ்சியில் போட்டியிடும் இராஜேந்திரன் மேல்மலையனூரைச் சேர்ந்தவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் பொருளாதார வசதி இல்லாதவர்.

இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள மயிலாடுதுறை சித்தமல்லி பழனிசாமி சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உறவினர். முன்னாள் மாவட்டச் செயலாளர், விருத்தாசலம் கார்த்திகேயன் தேமுதிகவில் இருந்து வந்தவர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமியால் பரிந்துரை செய்யப்பட்டவர்,

நெய்வேலி வேட்பாளரான ஜெகன் பாமகவில் இருந்து வெளியேறிய வேல்முருகனைக் கடுமையாக எதிர்த்தவர். அவரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. கும்மிடிப்பூண்டி எம்.பிரகாஷ், சேப்பாக்கம் கஸ்ஸாலி, சோளிங்கர் கிருஷ்ணன், கீழ்வேளூர் (தனி) வேதமுகுந்தன், மைலம் சிவக்குமார் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம் மகேஷ்குமார் ராமதாஸால் ஓரம்கட்டப்பட்டவர் என்றும், அன்புமணி ஆதரவாளர் என்றும் கட்சியினர் கூறுகிறார்கள்.

இன்னும் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளரை இன்று அறிவிக்கிறது பாமக.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட பாமகவில் பணம் இருந்தால் சீட்டு வாங்கிவிடலாம் என்ற விமர்சனங்கள் அக்கட்சியினராலேயே வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் பாமகவின் வேட்பாளர் பட்டியல் வித்தியாசமாக இருக்கிறது. “கட்சியோடு நீண்ட பயணம் மேற்கொண்ட, கட்சிக்கு விசுவாசமாக உழைக்கிறவர்களுக்கும் பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கும் இம்முறை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் டாக்டர் ராமதாஸும், அன்புமணியும்” என்ற குரல் இம்முறை கேட்கிறது.

-வணங்காமுடி

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வியாழன் 11 மா 2021