மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

கேரள சி.பி.எம். வேட்பாளர் பட்டியல்: 5 அமைச்சர்களுக்கு சீட் இல்லை!

கேரள சி.பி.எம். வேட்பாளர் பட்டியல்: 5 அமைச்சர்களுக்கு சீட் இல்லை!

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சிபிஐ-எம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஐந்து அமைச்சர்களுக்கும், 33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

காரணம், சிபிஐ-எம் கட்சியின் கொள்கைப்படி யாரும் இரண்டு முறைக்கு மேல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுபெறமுடியாது என சிபிஐ-எம் கட்சியில் அமைப்பு விதியாக வகுக்கப்பட்டிருப்பதுதான்!

இதன்படி, நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பொதுப்பணித் துறை அமைச்சர் ஜி.சுதாகரன், தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், கல்வியமைச்சர் சி.இரவீந்திரநாத், பண்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் ஆகியோர் மற்றவர்களுக்கு வழிவிட்டு விடைபெறுகின்றனர். இதேவேளை, முப்பது வயதுக்குக் குறைவான நான்கு பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில், சிபிஐ-எம் கட்சிக்கு 85 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் ஆகிய தொகுதிகளைத் தவிர 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநில (பொறுப்புச்)செயலாளர் விஜயராகவன் நேற்று வெளியிட்டார்.

சிபிஐ-எம் கட்சியினர் மட்டுமில்லாமல், அந்தக் கட்சியால் ஆதரிக்கப்படும் ஒன்பது சுயேச்சை வேட்பாளர்களும் அடக்கம்.

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமாக 38 மூத்தவர்களும் கட்சி விதியின்படி அடுத்து வருபவர்களுக்கு வழியைவிட்டுச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் வேறு வகையில் கட்சிக்குள் கடந்த சில நாள்களாக ஒரே போராட்டமாக இருந்துவருகிறது.

குட்டியடி, பொன்னணி, ரண்ணி ஆகிய மூன்று தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதை அந்தந்தத் தொகுதி சிபிஎம் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியின் முடிவை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அதையும் மீறிதான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது, கேரள சிபிஎம் கட்சி.

கூட்டணிக் கட்சிகளுக்காக (5 சிட்டிங் தொகுதிகள் உள்பட) ஏழு தொகுதிகளை தியாகம்செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார், தற்காலிக மாநிலச் செயலாளர் விஜயராகவன். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் இந்த மாநிலத்தில் தொடரவேண்டும் என்பதை மனதில்வைத்துதான் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று அதிருப்தியாளர்களுக்கான விளக்கமாகவும் அவர் கூறினார்.

இரண்டாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பது பினராயி விஜயன் தலைமையிலான சகாக்களின் ஆவல்!

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 11 மா 2021