மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

அமித் ஷாவிடம் நான் பாடம் கற்க வேண்டுமா?: பினராயி

அமித் ஷாவிடம் நான் பாடம் கற்க வேண்டுமா?: பினராயி

‘அமித் ஷாவிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏழு கேள்வி கேட்டு பினராய் பதிலளிக்கக் கோரி பேசினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பினராயி விஜயன், “அமித் ஷாவிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவின் பங்கு என்ன என்பதை இந்திய மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். நான் ஒரு போதும் பல மாதங்கள் சிறைவாசம் இருந்ததில்லை.

அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முன்பாக தங்களின் கடந்த காலங்களையும் அவர்கள் பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சர் விரும்பத்தகாத மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளைக் கூறி மாநிலத்தை அவமதித்து விட்டார். அவரது பிரிவினைவாத கொள்கை கேரளாவில் பலிக்காது” என்று கூறியுள்ளார்.

- சக்தி பரமசிவன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வியாழன் 11 மா 2021