மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

உடுமலைப்பேட்டையா? அதிர்ச்சியில் சிறுத்தைகள்!

உடுமலைப்பேட்டையா? அதிர்ச்சியில் சிறுத்தைகள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் எனப் பட்டியலிட்டு திமுக தலைமையிடம் கொடுத்துள்ளார்கள். என்னென்ன தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையின் போது, ‘பொதுத் தொகுதியிலும் நீங்கள் போட்டியிடுவது என்ற அடிப்படையில் உடுமலைப்பேட்டை தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று திமுக தரப்பில் கூறியிருக்கிறார்கள்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக சார்பில் அங்கே போட்டியிடுகிறார். உடுமலைப்பேட்டையா என்று அதிர்ச்சி அடைந்த சிறுத்தைகள், அது வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். மேலும், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சோழவந்தான் தொகுதியை விட்டுத் தரவே முடியாது என்று திமுக மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

‘சிறுத்தைகளுக்குக் கொடுத்தால் இந்தத் தொகுதியின் ரிசல்ட் சரியாக இருக்காது' என்று வெளிப்படையாகவே திமுக தலைவரிடம் மதுரை திமுகவினர் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிறுத்தைகளோ மதுரையில் ஒரு தொகுதியைக் கேட்டுப் பெறுவது என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இதனால் தொகுதிகள் பகிர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

"திமுக பொருளாளர் பாலு தலைமையிலான குழுவுடன் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை வழங்கி பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஏறத்தாழ நான்கு தொகுதிகள் ஒப்பந்தம் ஆகக் கூடிய நிலையில் உள்ளது. இன்னும் இரு தொகுதிகள் இறுதி செய்யக் கூடிய நிலை உள்ளது. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வோம்” என்றவரிடம்,

இழுபறிக்குக் காரணம் என்ன என்று கேட்டபோது, “திமுக மெகா கூட்டணி. ஒரு கட்சி போட்டியிட நினைக்கும் தொகுதியை மற்ற கட்சிகளும் கேட்பதால் பேசி இறுதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார் திருமாவளவன்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வியாழன் 11 மா 2021