மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது?

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது?

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 171 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில்.,.. திமுகவின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் எந்தெந்த தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதில் இழுபறி ஏற்பட்டது பற்றி இன்று காலை மின்னம்பலத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்: திமுக கூட்டணி நிலவரம் என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

அந்த செய்தியில் திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளோடு கிராஸ் ஆவது பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் ஐபேக் அலுவலகத்துக்கே சென்று இதுபற்றி ஆலோசனைகள் நடத்தினார்.

இன்று கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் தாங்கள் போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகள் குறித்து திமுகவோடு விவாதித்தார்கள் மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவுக்கு வந்து, அதன் பிறகே திமுகவின் தொகுதிகள் பட்டியல் தெரிய வரும்.

இப்போதைய நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேந்தன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

புதன் 10 மா 2021