மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை : முத்தரசன்

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை : முத்தரசன்

தோ்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று ராஜபாளையத்தில் இ.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

ராஜபாளையத்தில் செவ்வாய்க் கிழமை கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். சில நேரங்களில் பட்டாசு விபத்தால் மனிதர்கள் பலியாகின்றனர். விபத்தைக் காரணம் காட்டி பட்டாசு ஆலையை மூடக்கூடாது. அது சரியான அணுகுமுறை இல்லை. சிறுசிறு குறைகளைக் காரணம் காட்டி ஆலைகளுக்குச் சீல் வைத்தால் எந்த தொழிலும் நடத்த முடியாது.

விதிமீறல்கள் அரசுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது. இதை தடுத்தாலே விபத்துகள் ஏற்படாது. விதிகளைக் கடைப்பிடிக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்த வேண்டும். பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கத் தனி தொழிற்சாலைகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான ஆய்வு இல்லாதது தான் பட்டாசு தொழிலில் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக உள்ளது'

பெட்ரோல், சிலிண்டர் விலையை மத்திய அரசு தான் உயர்த்துகிறது. தி.மு.க., 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் ஆட்சிக்கு வந்தால் செய்யும் திட்டங்களை வாக்குறுதிகளாகக் கூறுகிறார்கள். ஆனால் 10 ஆண்டு ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வினரும் எதிர்க்கட்சியினர் போல் இலவசங்களை அள்ளிவீசி பேசுகிறார்கள்.

முதல்வரின் அறிவிப்பு போட்டிக்காக மட்டுமே. அது உணர்வுப்பூர்வமானது இல்லை. அ.தி.மு.க., ரகசியமாகத் தயாரித்த வாக்குறுதிகள் கசிந்து விட்டது என்றால் அது அக்கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. அதிமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால் விலைவாசி தான் உயரும். இலவசம் என்பது ஏமாற்று வேலை. ஆட்சிக்கு வர முடியாது என்பதால் தான் இதுபோன்ற அறிவிப்புகளை ஆளும் கட்சி அறிவித்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களின் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்பது தெரிகிறது. தோ்தல் ஆணையம் தோ்தல் தேதி அறிவித்து அதன் பின்னர் அரசியல் கட்சிகளுக்கு உரிய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆணையம் அதைச் செய்யவில்லை. தோ்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தலை திடீரென அறிவித்து எதிர்க்கட்சிகளைச் செயல்படவிடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்த நெருக்கடியைச் சமாளித்து திமுக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

-சக்தி பரமசிவன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 10 மா 2021