மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

ஈஸ்வரனுக்கு 3: ஸ்டாலினை இசைய வைத்த சூரியன்!

ஈஸ்வரனுக்கு 3: ஸ்டாலினை இசைய வைத்த சூரியன்!

திமுக கூட்டணியிலேயே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கடைசி கட்சி என்ற பெயரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி கூட்டணி நேற்று பெற்றது.

நேற்று (மார்ச் 9) இரவு அறிவாலயத்துக்குச் சென்ற ஈஸ்வரன் திமுக கூட்டணியில் 3 இடங்களில் உதயசூரியனில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தத்தில் ஸ்டாலினுடன் இணைந்து கையெழுத்திட்டார். இதன் மூலம் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழுமை பெற்றுவிட்டது.

சிறிய கட்சி எளிதில் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிடலாம் என்று கருதிய திமுக தலைமையிடம் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தொடர்ந்து போராடியிருக்கிறார்.

முதலில் அக்கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்றுதான் திமுகவில் சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து பேசியதில் இரு இடங்கள் என்று திமுக தரப்பு இறங்கி வந்தது.

ஆனால் விடாத ஈஸ்வரன் நேற்று (மார்ச் 9) மதியம் ஸ்டாலினைச் சந்தித்து, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றால் மூன்று இடங்கள் இப்போது கொடுத்து வருகிறீர்கள். அப்படிப் பார்த்தால் எங்களுக்கும் மூன்று இடங்கள்தானே தர வேண்டும். ஏன் எங்களுக்கு மட்டும் குறைக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்டாலின், “சரி... நான் பேசிட்டு சொல்றேன்” என்று பதில் சொல்லியனுப்பியுள்ளார்.

அதன்பின் ஈஸ்வரனிடம் பேசிய ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர், “நீங்க உதயசூரியன்ல நிக்கறதுக்கு தயார்னு தலைவர்கிட்ட சொல்லுங்க. உங்களுக்கும் மூன்று சீட் ஓகே ஆகிடும்” என்று சொல்ல, ஈஸ்வரனும் ஸ்டாலினிடம், “சூரியனிலேயே போட்டியிடுகிறோம்” என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து உடனடியாக நேற்று இரவு 8 மணிக்கு அறிவாலயத்துக்கு ஈஸ்வரன் வந்து சேர, ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 10 மா 2021