மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

சட்டசபைக்குக் குதிரையில் வந்த பெண் எம்.எல்.ஏ

சட்டசபைக்குக் குதிரையில் வந்த பெண் எம்.எல்.ஏ

உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 8) சட்டசபைக்கு பெண் எம்.எல்.ஏ ஒருவர் குதிரையில் வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உலக மகளிர் நாளையொட்டி ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பா பிரசாத் குதிரையில் சட்டமன்றத்துக்கு வந்தார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பார்காகோன் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அம்பா பிரசாத். சட்டப்பேரவையிலேயே இளம் வயது உறுப்பினரான அவர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவைக்குக் குதிரை மீது அமர்ந்து வந்தார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ரவி ரத்தோர் உலக மகளிர் நாளையொட்டி தனக்கு இந்தக் குதிரையைப் பரிசளித்ததாக அவர் தெரிவித்தார்.

-ராஜ்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 9 மா 2021