மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தே.ஜ. கூட்டணிக்கு ரங்கசாமிதான் தலைமை: புதுவையில் பகிரங்கப்படுத்திய பாஜக!

தே.ஜ. கூட்டணிக்கு ரங்கசாமிதான் தலைமை: புதுவையில் பகிரங்கப்படுத்திய பாஜக!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசும் பாஜகவும் ஒருவழியாகக் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என அறிவிப்பதற்குள், அப்பப்பா எத்தனை சம்பவங்கள், திருப்பங்கள்.. இதற்கு முன் புதுச்சேரி அரசியல் இப்படியொரு தேர்தலைப் பார்த்திருக்குமோ என்னவோ?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்ததால், கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது. இரவோடு இரவாகத் தொகுதிப்பங்கீடு முடிவாகி, உடன்பாடு ஏற்பட்டது. அதை இன்று ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக, வழக்கமாகத் தான் செல்லும் அண்ணாமலை ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.

இதற்காக, காலை 10 மணியிலிருந்தே செய்தியாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் சந்திக்கவேண்டியவர்கள் வந்துகொண்டே......... இருந்தார்கள். நண்பகல் 12 மணியளவில் ரங்கசாமியும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இருவரும் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தனர். அங்கேயே என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும் பா.ஜ.க.வுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கையெழுத்திடப்பட்டது.

அதையடுத்து பேசிய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, ” இந்தக் கூட்டணி முடிவாகிவிட்டது. தேர்தலைச் சந்திக்கக்கூடிய நிலையில் இருக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பதவி குறித்து வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்வார்கள். இப்போதைக்கு அதைப் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று கூறினார்.

சுரானா பேசுகையில், “ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புதுவையில் ரங்கசாமி தலைமையேற்பார். பாஜகவின் 14 தொகுதிகளில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் பிரித்துக்கொடுப்போம். முதலமைச்சர் பதவி குறித்து இப்போது முடிவுசெய்யவில்லை. இந்த அடிப்படையில்தான் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.” என்று கூறி, மொத்தமே கால் மணி நேரத்துக்குள் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டனர்.

-வணங்காமுடி

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 9 மா 2021