மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

அதிமுக-பாமக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்- விஜய பிரபாகரன் விளாசல்!

அதிமுக-பாமக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்- விஜய பிரபாகரன் விளாசல்!

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகும் முடிவை எடுத்த நிலையில் இன்று (மார்ச் 9) கடலூர் மாவட்டத்தில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் விஜயகாந்தின் மகன் விஜய. பிரபாகரன்.

இந்தக் கூட்டத்தில் அவர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆவேசமாகப் பேசினார். தொடர் ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே அவர் பேசும்போது,...

“ஒரு பக்கம் கேப்டனுக்கு உடம்பு சரியில்லை. இன்னொரு பக்கம் கட்சிய பாக்கணும், அம்மா டயர்டாகிட்டாங்க. உங்களைப் பாத்து தெம்பா இருப்பாங்க, அப்புறம் வீட்டுக்கு வந்ததும் கேப்டனைப் பாத்ததும் சின்ன வேதனை அடைஞ்சிடுவாங்க.

கேப்டன் என்கிட்ட சொல்லி அனுப்புனாரு, ‘தைரியாமா போய் பேசுடா. நம்ம தொண்டர்கள் இருக்காங்க’னு சொன்னாரு. அந்த தைரியத்துல, நம்பிக்கையில இருக்கேன்.

காலதாமதமானாலும் இன்னிக்கு நல்ல முடிவெடுத்திருக்காங்க. இது முடிவல்ல... இதுதான் ஆரம்பம். உங்களுக்காகத்தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். என்னை நம்புங்க, நான் பாத்துக்கறேன் ஃபியூச்சரை. எங்க அப்பாவை சிம்மாசனத்துல உட்கார வைக்கிறேன். அதுக்காக நீங்க 200 பர்செண்ட் என் கூட நிக்கணும் இந்தத் தேர்தல் மட்டுமில்ல,.. தேர்தல் முடிஞ்சவுடன் ஒவ்வொரு கிராமம், கிளைக்கும் நான் வர்றேன். பாத்துடலாம். நம்மளா அவங்களானு பாத்துடலாம்.

என்னை என்ன சொல்லிடுவாங்க? வாரிசு அரசியல்னு சொல்லுவாங்க. வாரிசு இல்லாதவன் தான் வாரிசு அரசியலப் பத்தி பேசுவான். கேப்டன் ரெண்டு சிங்கக் குட்டிகளை பெத்தெடுத்திருக்காரு. எனக்கு தன்னம்பிக்கை அதிகம். 170 கிலோ இருந்தேன். இன்னிக்கு 80 கிலோ இருக்கேன். எனக்கு தன்னம்பிகை ஜாஸ்தி. பாத்துடலாம்... களத்துல இறங்குறேன்.

எப்படி கேப்டன் வேட்டிய மடிச்சுக் கட்டி களத்துல இறங்குனரோ அதுபோல நான் இறங்குறேன்

ஏதோ பேரம் பேரம்னு நம்மளை பேசுறாங்க. நான் கேட்குறேன்... எத்தனையோ இன்டெலிஜன்ஸ் அமைப்புகள் இருக்கே... ஒருத்தன் வந்து ப்ரூஃப் பண்ணுடா... நாங்க பேரம் பேசினோம்னு. எத்தனை மீடியாக்கள் பேசினாங்க. ஒரு மீடியாவுக்கு தைரியம் இருந்தா ப்ரூஃப் பண்ணுங்க.’

கேப்டன் நல்லா இருந்த வரைக்கும் கோபப்படுறாருனு சொன்னீங்க. எங்க அம்மா வந்ததும்,மாமா வந்ததும் அவங்களைப் பத்தி தப்பா பேசினீங்க. இப்ப கட்சி பேரம் பேசுதுனு சொல்றீங்க. ஊழல் செஞ்சு ஜெயிலுக்கு போயிட்டு வந்த உங்க தலைவியே ஆட்சிய பிடிக்கும்போது மக்களுக்காக போராட்டம் பண்ற நாங்க ஏண்டா பயப்படணும்?

இந்தத் தேர்தலுக்கு அப்புறம் அதிமுக தலைவர்கள் வரிசையா ஜெயிலுக்கு போகப் போறாங்க. அதிமுக பாஜக மண்ணைக் கவ்வப் போகுது. டெல்லியில இருக்குறவன் காண்டாகப் போறான். இங்க இருக்குறவங்கள பிடுச்சு உள்ள போடப் போறான். இதுதான் நடக்கப் போகுது. தைலாபுரம் தோட்டத்துல இருக்கிறவரு இப்ப பொங்குவாரு. எலக்‌ஷன் முடிஞ்சதும் வீட்டுக்குள்ளயே போயிடுவாரு. இதான் நடக்கும்”என்று எடப்பாடி, ராமதாசை எல்லாம் சகட்டுமேனிக்குத் தாக்கியவர் தொடர்ந்து பேசினார்.

“நாம் மீண்டும் பத்து பர்சென்ட் ஓட்டு வாங்கணும். நம்மை மீண்டும் நிரூபிக்க யாரெல்லாம் என் கூட வருவீங்க. ஒரு மாசம்தான் இருக்கு பரவாயில்லை. 234 தொகுதியும் ராப்பகலா உழைக்க நான் தயார். நீங்க தயாரா....”என்று கேட்டார் விஜய பிரபாகரன்.

“ என்னை விஜயகாந்த் பையனா பாக்காதீங்க. உங்க ஃப்ரெண்டா பாருங்க. ப்ரோவா பாருங்க. உங்க மாமா மச்சானா பாருங்க. நம்மளை நிறைய பேரு முதுகுல குத்தியிருக்காங்க. அடுத்தவாட்டி குத்தும்போது அப்படியே பிடுங்கி நாம குத்திடணும். எப்படி 2006 இல் கேப்டன் விருத்தாசலத்துல நின்னு ஜெயிச்சாரோ அதேமாதிரி கேப்டனோ, நம்ம அண்ணியாரோ விருத்தாசலம் அல்லது பண்ருட்டியில நிக்கணும். மீண்டும் நம் குரல் சட்டமன்றத்துல ஒலிக்கணும். எல்லாரும் அதுக்கு தயாரா இருங்க. ஆனா அதிமுக-பாமக கூட்டணியை ஜெயிக்கவே விடக் கூடாது. தோக்கடிக்கணும்”என்று பேசியிருக்கிறார் விஜய பிரபாகரன்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 9 மா 2021