மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்! -எல்.கே.சுதீஷ்

கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்!  -எல்.கே.சுதீஷ்

அதிமுகவிலேயே பாமகவின் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (மார்ச் 9) பிற்பகல் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “ மாவட்டச் செயலாளர்கள் ஒட்டுமொத்தத் தொண்டர்களின் கருத்தை கேப்டனிடம் கூறினார்கள். தேமுதிகவுக்கு கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியது. இதை கேப்டன் அறிவித்திருக்கிறார். இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி.

தமிழகத்தில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள். குறிப்பாக கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக அதிமுகவில் இருக்கிறார். அவர் அதிமுககாராக இல்லை. பாமகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்ட முடிவை தலைமை ஆலோசித்து மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் ஆத்திரத்திலும் அவசரத்திலும் வார்த்தைகளை அள்ளி இறைக்கக் கூடாது. எங்களை விட்டுப் போனது தேமுதிகவுக்குத்தான் இழப்பு. அரசியல்வாதிகளாக இருந்தால் நிதானம் இருக்கும். அவர்கள் யாரென்று இதில் இருந்து தெரிகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பலம் இருக்கிறது. கடந்த கால தேர்தல் முடிவை வைத்துதுதான் அதை எடைபோட முடியும். அதன்படிதான் ஒவ்வொரு கூட்டணிக்கும் இடங்கள் ஒதுக்கினோம். நாங்கள் கூட்டணி தர்மத்தோடுதான் நடந்துகொண்டோம். தொடர்ந்து தேமுதிகவினர் அவ்வாறு பேசினால், நாங்களும் பேசுவோம்” என்று கூறியுள்ளார.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

செவ்வாய் 9 மா 2021