மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தீவிர பிரச்சாரம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

தீவிர பிரச்சாரம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் 3,57,478 முகாம்களில்‌ 2.30 கோடி பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதையடுத்து 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நேற்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 9) காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

நாளை (மார்ச் 10) திமுகவின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு...அதுமுதற்கொண்டு தொடர்ந்து பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட இருக்கிறார் ஸ்டாலின்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 9 மா 2021