மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது: கமல்

தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது: கமல்

தமிழ்நாடு ஏழ்மையில் தகிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் என முதல்வர் பெருமையாகக் கூறி வரும் அதேவேளையில், தமிழகத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “23 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது. பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்கள், குடும்பம் காக்க உழைக்கச் சென்றுவிட்டார்கள். தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம்தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 9 மா 2021